இற்பொலியுந் திருவடிகள் எனிற்கைலை மலைக்கிறைவ எழை நாயேன் நிற்களிப்ப தெவன்இந்த நெஞ்சமே. யுனக்களிக்க நேர்ந்த தாமே. (சிவானந்த லஹரி. 27) பக்கம் - 639.(2) போற்றர்க்காய் - மார்க்கண்டனுக்காக; கூற்றை உதைத்தன (அவன் மார்பைக்) கிழித்தன. தக்கன் வேள்வியை அழித்தன. கீழ - முன் நாளின். முன் சென்று - எதிரிற் சென்று. (3) கணிநிறம் - வேங்கைப்பூவின் நிறம் பக்கம் - 640. (6) முகந்து ஏற்றல் - வாரி எடுத்து ஏற்றல். (8) விண்பட்டிகை இடும் - விண்ணுலகை உரிமையாக்கி ஒலையில் ஆவணம் எழுதிக்கொடுக்கும். (10) பைம்போது - பசும்பொற்பூ எனலுமாம். இவை அமரர்களின் கிரிடங்களினின்றும் உதிர்ந்தவை. பவளம் தழைப்பன - சிவப்பன; பொற்றுகள் அழுத்தியதனால் என்க. தேவரும் வணங்கும் மகாதேவனாயினும் என்போல்வாரின் விதிப்படி அமையாத பூசனையையும் ஏற்றுக்கொள்வான் என்றலின் சிவனது சௌலப்பியம் கூறப்பட்டது. - (13) உற்றார் - அணுகியவர். (திருக்கோவையர் 218 உரை).- (18) காந்தள் அணங்கும் அரவிந்தம் - காந்தள் பூவால் தீண்டப்பட்ட தாமரை. அம்மையாரின் கைகள் காந்தள். இறைவனின் பாதம் தாமரை. - (19) சுழலார்...நிழலாவன் - கோடையினால் வருந்திய வழி நடப்போன். நிழல் மரத்தை அடைவதுபோல இராவணனால் வருந்திய தேவர்கள் ஹரியைச் சென்றடைந்தனர். (ரகுவம்சம். 10 - 5 - சுலோ). பக்கம் - 642. (1) குறுதல் - குற்றுதல். (நெற்குற்றுதல் என்பது போல.) வருத்துதல்.- (2) கூர்தல் - படுதல் - அனுபவித்தல். ஊர்தல் - அடுக்கிமேல் எழுதல். "அடுத்தூர்வ தஃதொப்பதில்" (குறள்).-(3) நெடுநீரினின்றேற....ஆக்கினவா - கல்மிதப்பாகக் கடப்பித்ததைக் குறிக்கும் எனலுமாம். பக்கம் - 645. l. (2) வாமன் - அழகியவன். - (4) நெடிதரு பொழில்கள் - நெடுமையான சோலைகள். பக்கம் - 646. lll. (1) சுடர்வாணர் - தேவர்கள். "திவ்ய தீதி தேவ:" எனலுமாம். பக்கம் - 648. V. (7) தூசு - கழுத்திலிடும் கயிறு (சிந்தாமணி 1602). - (10) தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் - இல்லாருககு (நாஸ்கதிகருக்கு) இல்லாதவன். அல்லாருக்கு (தீயோருக்கு) அல்லாதவன். பக்கம் - 654.பைத்தானத்து - குளிர்ந்த இடமுடைய; குளிர்ச்சியான. (4) கழல் நம் கோ ஆதல் - நீங்குதல் (இறத்தல்). நம் கண் முன்னே கண்டும் எனலுமாம். (7) திண்டி - தின்றி என்பதன் மரூஉ. தீனி. பக்கம் - 657. (5) "நீறில்லாத நெற்றியைச் சுடு; சிவனை அர்ச்சிக்காத பிறப்பைச் சுடு; சிவனைப் பேணாத கல்வியைச் சுடு" (ப்ருகஜ்ஜாபாலோபநிஷத்). வெண்கொடி - தரும - ரூபம் = வெளுத்திருப்பதால் கொடி வெண்கொடியாயிற் றென்க. (தக்கயாக பரணி 634 உரை.). (7) நின்னாவார் ....நீயேயானாய் - "தன்னாவா ரில்லாத் தகைமை யான்" (ஆதியுலா 135). என் ஆனாய் - எனது யானையே. யானை - காதற்கிளவி. - (8) எம்பரமோ - எம்மால் தாங்கக் கூடி யதோ? எனக்குத் தகதியுண்டோ? பக்கம் - 658. (10) நந்தீசனைக் குடமுழ வாசகனாகக் கொண்டார் என்க. |