சைவத் தெய்வத் திருமுறைத் திரட்டு37

 

பக்கம் - 664. (1) ஏயிலான் - இசைவடிவானவன் எனலுமாம். ஏயில் கானம்; இசை. (திருவாய்மொழி 4 - 6 - 3 ஈடு) மனோன்மணியைப் பெற்றதாயிலான் எனக்கொள்க. பெற்றான் - மணந்தவன் எனலுமாம். "பெற்றார் பெறிற் பெறுவர்ஸ" (குறள் 58).

1665. பண்பு - "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி" (பிள்ளை - தேவா). எண் பெருக உரைத்தருள - வாகீசரது எண்ணம் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் என்பவர்கள்பால் பெருக எனலுமாம்.

1667.கதிர்மதியம் தீண்டுகொடி - கதிரையுடைய மதியைத் தொடுகின்ற கொடிகள் உயர்த்திய மதில் என்க.

பக்கம் - 687. (9) வளைவுஇலி - கோணுதல் இல்லாதவன், செம்மையாளன். - (10) துலையாக ஒப்பாக. -(11) ஆத்தன் - ஆப்தன், உண்மையான நண்பன்.

பக்கம் - 690 - (3) கருமருந்து - கருவை நீக்கும் மருந்து.

பக்கம் - 704.(1) ஆமயம் - நோய்.

பக்கம் - 705.(11) நந்தீசனைக் குடமுழ வாசகனாகக் கொண்டார் என இயைக்க.

பக்கம் - 721. Xlll. (1) பெற்றி - இயல்பு. நீர்மை - செயல். அகன்நேர்வர் - உள்ளத்தை அவனுக்கு அளிப்பர்; தியானிப்பர். "கானார் புலித்தோல்" என்ற திருவாசகம் காண்க. - (3) விம்ம - மகிழ. (4) மிளிர்கின்ற - புரளுகின்ற.

1685.உற்பலம் - நீலோற்பலம். வட்டணை - கமலவர்த்தனை முதலிய முத்திரைகள்.

திருநாவுக்கரசு நாயனாரைப்பற்றிய

சைவத் தெய்வத் திருமுறைத் திரட்டு

தேவாரம்

1. திருத்தொண்டத்தொகைப் பாசுரம் மேலே தனித்தாளில் பொறிக்கப்பட்டுள்ளது.

2.

நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை யூரன்னுரை செய்த
பாவின் றமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.

- நம்பி - திருக்கேதாரம் - 10

3.

நற்றமிழ் வல்ல - ஞானசம் பந்த
         னாவினுக் கரச னாளைப்போ வானுங்
கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி
         கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்.