நீற்றா னிறைவா கியமே னியுட னிறையன் புறுசிந் தையினே சமிக மாற்றார் புரமாற் றியவே தியரை மருளும் பிணிமா யையறுத் திடுவான் "கூற்றா யினவா றுவிலக் ககிலீ ரெனநீ டியகோ திறிருப் பதிகம் போற்றா லுலகே ழின்வருந் துயரும் போமா றெதிர்நின் றுபுகன்றனரால். - தேவாரம் திருவதிகைவீரட்டானம் - பண் - கொல்லி கூற்றா யினவா றுவிலக் ககிலீர் கொடுமை பலசெய் தனநா னறியேன் ஏற்றா யடிக்கே யிரவும் பகலும் பிரியா துவணங் குவனெப் பொழுதும் தோற்றா தென்வயிற் றினகம் படியே குடரோ டுதுடக் கிமுடக் கியிட ஆற்றே னடியே னதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. 1 |