1417. | நிடுதிருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற வாடகமே ருச்சிலையா னருளாலோர் சிவபூத் மாடொருவ ரறியாமே வாகீசர் திருத்தோளிற் சேடுயர்மூ விலைச்சூலஞ் சினவிடையி னுடன்சாத்த. 152 - புராணம் |
திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம் | | பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யு மென்னாவி கரப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்ட றுன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே. 1 |
கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோ லிடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்க டடவுங் கடந்தையுட் டூங்கானை மாடத்தெந் தத்துவனே. 10 6. திலகவதியாரைச் சிவனருளேயாகத் துதித்தல் - புராணம் 1398. | தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன் செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண் கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற விழுந்தெழுந் தருணெறி விளங்கப் பாடுவார். |
133 1399. | "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாகி" யென வெடுத்துத் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்கட் கென்று வான்றாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ் சான்றா மொருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே. 134 |
- புராணம் திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க வேன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே. தனித் திருத்தாண்டகம் அப்பனீ யம்மைநீ யைய னுநீ யன்புடைய மாமனு மாமி யுநீ யொப்புடைய மாதரு மொண்பொரு ளுநீ யொருகுலமுஞ் சுற்றமு மோரு ருநீ துய்ப்னவு முய்ப்பனவுந் தோற்று வாய்நீ துணையா யென்னெஞ்சத் துறப்பிறப்பாய்நீ யிப்பொன்னீ யிம்மணிநீ யிம்முத் துநீ யிறைவனீ யேறூர்ந்த செல்வ னீயே. 7. திருத்தில்லைத் தரிசனம் - புராணம் 1432. | கையுந் தலைமிசை புனையஞ் சலியன கண்ணும் பொழிமழை யொழியாதே பெய்யுந் தகையன கரணங் களுமுட னுருகும் பரிவின பேறெய்து |
|