| ணினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந் தொழியாத தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போன் மனந்தழைத்தார். 197 |
- தேவாரம் திருநல்லூர்த் திருத்தாண்டகம் நினைந்துருகு மடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைக ணீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியன் றளிர்வைத்தார் சிறந்து வானோ ரினந்துறுவி மணிமகுடத் தேறத் துற்ற வினமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 10. அப்பூதிமக னரவு மாற்றியது - புராணம் 1472. | தம்புதல்வன் சவமறைத்துத் தடுமாற்ற மிலராகி யெம்பெருமா னமுதசெய வேண்டுமென வந்திறைஞ்ச வும்பர்பிரான் றிருத்தொண்ட ருள்ளத்திற் றடுமாற்ற நம்பர்திரு வருளாலே யறிந்தருளி நவைதீர்ப்பார். |
207 1473. | அன்றவர்கண் மறைத்ததனுக் களவிறந்த கருணையராய்க் கொன்றைநறுஞ் சடையார்தங் கோயிலின்முன் கொணர்வித்தே "யொன்றுகொலா" மெனப்பதிக மெடுத்துடையான் சீர்பாடப் பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான். |
208 - தேவாரம் பொது - (விடந்தீர்த்த திருப்பதிகம்) - பண் - இந்தளம் ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை - ஒன்றுகொ லாமய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது - ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே. 1 திருப்பழனம் - பண் - பழந்தக்கராகம் | வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தா னஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே. |
10 11. திருவாரூர்த் தரிசனம் - புராணம் 1485. | பற்றொன் றிலாவரும் பாதக ராகு மமணர்தம்பா லுற்ற பிணியொழிந் துய்யப்போந் தேன்பெற லாவதொன்றே புற்றிடங் கொண்டான்றன் "றொண்டர்க்குத் தொண்டராம் புண்ணிய"மென் றற்ற வுணர்வொடு மாரூர்த் திருவீதி யுள்ளணைந்தார். |
220 1489. | செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின் முன்றேவா சிரியன் சார்ந்து "கொய்யுலா மலர்ச்சோலைக்குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக் கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனே"னென் றெய்தரிய கையறவாற் றிருப்பதிக மருள்செய்தங் கிருந்தாரன்றே. 224 |
|