- தேவாரம் திருவாரூர் - திருவிருத்தம் குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ அலம்பலம் பாவரு தண்புன லாரூ ரவிர்சடையான் சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலட்டானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. நமிநந்தியடிகள் - புராணம் 1492. | நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி யடிகடிருத் தொண்டி னன்மைப் பான்மைநிலை யாலவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப் பாடித் தேன்மருவுங் கொன்றையார் திருவாரூ ரானெறியிற் றிகழுந் தன்மை யானதிற மும்போற்றி யணிவீதிப் பணிசெய்தங் கரும நாளில். |
227 - தேவாரம் திருவாரூர் - திருவிருத்தம் ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரு ரகத்தடக்கிப் பாரூர் பாரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான் நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன் நம்பிநந்தி நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. 2 திருவாதிரை நாள் - புராணம் 1494. | மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங் கப்பெருமாள் பவனி தன்னிற் றேவருடன் முனிவர்கண்முன் சேவிக்கு மடியார்க ளுடன்சே வித்து மூவுலகுங் களிகூர வரும்பெருமை முறைமையெலாங் கண்டு போற்றி நாவினுக்குத் தனியரசர் நயக்குநா ணம்பர்திரு வருளி னாலே. |
229 - தேவாரம் திருவாரூர் - பண் - குறிஞ்சி முத்து விதான மணிப்பொறி கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிக ளத்த னாரூ ராதிகை நாளா லதுவண்ணம். 12. திருவிழிழலை - படிக்காசு பெற்றது - புராணம் 1523. | விண்ணின் றிழிந்த விமானத்தின் கிழக்கு மேற்கும் பீடத்தி லண்ணல் புகலி யாண்டகையார் தமக்கு மாண்ட வரசினுக்கு நண்ணு நாள்க டொறுங்காசு படிவைத் தருள நானிலத்தி லெண்ணி லடியா ருடனமுது செய்தங் கிருந்தா ரிருவர்களும். |
258 1524. | "அல்லர் கண்டத் தண்டர்பிரா னருளாற் பெற்ற படிக்காசு பல்லா றியன்ற வளம்பெருகப் பரம னடியா ரானார்க ளெல்லா மெய்தி யுண்க" வென விரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச் சொல்லாற் சாற்றிச் சோறிட்டார் துயர்கூர் வறுமை தொலைத் திட்டார். 259 |
|