48புராணப் பாடற்றிரட்டும்

 

- தேவாரம்

திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

போரானை யீருரிவைப் போர்வை யானைப்
         புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்
         பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை
         நினையாதார் புரமொரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

1

13. திருமறைக்காடு - கதவஞ் திறப்பித்தது

- புராணம்

1533.

 உண்ணீர் மையினாற் பிள்ளையா ருரைசெய் தருள வதனாலே
"பண்ணி னேரு மொழியா" ளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான்
 றெண்ணீ ரணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப்
"பெண்ணி ரிரக்க மொன்றில்லீ" ரென்று பாடி யிறைஞ்சுதலும்.

268

1534.

வேத வனத்தின் மெய்ப்பொருளி னருளால் விளங்கு மணிக்கதவங்
காத லன்பர் முன்புதிருக் காப்பு நீங்கக் கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் றொழுது விழுந்தார் ஞாலத்து
ளோத வொலியின் மிக்கெழுந்த தும்ப ரார்ப்பு மறையொலியும்.

269

- தேவாரம்

திருமறைக்காடு - திருக்குறுந்தொகை

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

1

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீ - ரிரக்க மொன்றிலி ரெம்பெரு மானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ - சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

11

14. திருவாய்மூர் - காட்சி கண்டு பிள்ளையார் காட்டப் - பாடியது

- புராணம்

1545.

 அழைத்துக் கொடுபோந் தணியார்போற் காட்டிமறைந்தாரெனவயர்ந்து
"பிழைத்துச் செவ்வி யறியாதே திறப்பித் தேனுக் கேயல்லா
 லுழைத்தா மொளித்தாற், கதவந்தொண் டுறைக்கப் பாடி யடைப்பித்த
 தழைத்த மொழியா ருப்பாலார்; தாமிங்கெப்பான்மறைவ"தென,?

280

1546.

 மாட நீடு திருப்புகலி மன்ன ரவர்க்கு மாலயனு
 நேடி யின்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்தருள
 வாடல் கண்டு பணிந்தேத்தி யரசுங் காணக் காட்டுதலும்
"பாட வாடியா" ரென்றெடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்.

281

- தேவாரம்

திருவாய்மூர் - திருத்தாண்டகம்

பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடன் முழவம் அதிரக் கண்டேன் அங்கை யனல்கண்டேன் கங்கை யாளைக்
கோடலரவார் சடையிற்கண்டேன் கொக்கினிதழ்கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற் றலையொன்று கையிற் கண்டேன் வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

1