15. பழையாறைவடதளி - ஆயிரம் அமணர் தூரறுத்தது - புராணம் 1561. | "வண்ணங் கண்டு நானும்மை வணங்கி யன்றிப்போகே"னென் றெண்ண முடிக்கும் வாகீச ரிருந்தா ரமுது செய்யாதே யண்ண லாரு மதுவுணர்ந்தங் கரசு தம்மைப் பணிவதற்குத் திண்ண மாக மன்னனுக்குக் கனவி லருளிச் செய்கின்றார். |
296 1564. | ஆனை யினத்திற் றுகைப்புண்ட வமணா யிரமு மாய்ந்ததற்பின், மேன்மை யரசன் ஈசர்க்கு விமான மாக்கி விளக்கியபின், ஆன வழிபாட் டர்ச்சனைக்கு நிபந்த மெல்லா மமைத்திறைஞ்ச ஞான வரசும் புக்கிறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்; |
299 1565. | "தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ் சாதி யமணர் மறைத்தாலுள் நிலையி லாதார் நிலைமையினான் மறைக்க வெண்ணுமோ" வென்னும் விலையில்வாய்மைக்குறுந்தொகைக்கள்விளம்பிப் புறம்போந்தங்கமர்ந்தே யிலைகொள் சூலப் படையார்சே ரிடங்களபிறவுந்தொழவணைவார். |
302 - தேவாரம் திருப்பழையாறை வடதளி - திருக்குறுந்தொகை தலைய லாம்பறிக் குஞ்சமன் கையருண் ணிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமோ? அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. வாயி ருந்தமி ழேபடித் தாளுறா - ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் பாயி ரும்புன லாறை வடதனி - மேய வன்னென வல்வினை வீடுமே. 9 16. திருப்பைஞ்ஞீலி - பொதிசோறு பெற்றது - புராணம் 1569. | வழிபோம் பொழுது மிகவிளைத்து வருத்த முறநீர் வேட்கையொடும் அழிவாம் பசிவந் தணைந்திடவு மதற்குச் சித்த மலையாதே மெழிவேந் தருமுன் னெழுந்தருள முருகார் சோலைப் பைஞ்ஞீலி விழியேந் தியநெற் றியினார்தந் தொண்டர் வருத்த ட்பாராய், |
304 1570. | காவுங் குளமு முன்சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினான் மேவுந் திருநீற் றந்தணராய் விரும்பும் பொதிசோ றுங்கொண்டு நாவின் றனிமன் னவர்க்கெதிரே நண்ணி யிருந்தார் விண்ணின்மேற் றாவும் புள்ளு மண்கிழிக்குந் தனியே னமுங்காண் பரியவந்தாம்; |
305 1572. | நண்ணுந் திருநா வுக்கரசர் நம்ப ரருளென் றறிந்தார்போ "லுண்ணு" மென்று திருமறையோ ருரைத்துப், பொதிசோ றளித்தலுமே யெண்ண நினையா தெதிர்வாங்கி யினிதா வமுது செய்தினிய தண்ணீ ரமுது செய்தருளித் தூய்மை செய்து தளர்வொழிந்தார் |
307 1574. | கூட வந்து மறையவனார் திருப்பைஞ் ஞீவி குறுகியிட வேட மவர்முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர்தா |
|