| "மாடல் புரிந்தா ரடியேனைப் பொருளா வளித்த கருணை" யெனப் பாடல் புரிந்து விழுந்தெழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார். |
309 17. திருக்கச்சித் தரிசனம் - புராணம் 1588. | வார்ந்து சொரியுங் கண்ணருவி மயிர்க்கா றோறும் வரும்புளக மார்ந்த மேனிப் புறம்பலைப்ப வன்பு கரைந்தென் புள்ளலைப்பச் சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத் திருவே கம்பர்தமை நேர்ந்த மனத்தி லுறவைத்து நீடும் பதிகம் பாடுவார்; |
323 - தேவாரம் திருவேகம்பம் - பண் - காந்தாரம் கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தனை யரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி யிரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே. 1 திருவேம்பத் திருத்தாண்டகம் உரித்தவன்கா ணுரக்களிற்றை யுமையா ளொல்க வோங்காரத் தொருவன்கா ணுணர்மெய்ஞ் ஞானம் விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண் வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந் திரண்டவன்காண் டிரிபுரத்தை வேவ வில்லா லெரித்தவன்கா ணெழிலாரும் பொழிலார் கச்சி யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே. 2 18. திருக்காளத்தித் தரிசனம் - திருக்கயிலைக் குறிப்பு - புராணம் 1610. | காதணிவெண் குழையானைக் காளத்தி மலைக்கொழுந்தை வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி யெழுந்துபெருங் காதல்புரி மனங்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய் "நாதனையென் கண்ணுள்ளா" னெனுந்திருத்தாண் டகநவின்றார். |
1611. | மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குறமுன் னேநிற்குஞ் சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதஞ் சேர்ந்திறைஞ்சி யலைத்துவிழுங் கண்ணருவி யாகத்துப் பாய்ந்திழியத் தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார். |
346 1612. | சேணிலவு திருமலையிற் றிருப்பணியா யினசெய்து தாணுவினை யம்மலைமேற் றாருள்பணிந்த குறிப்பினாற் பேணுதிருக் கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலங் காணுமது காதலித்தார் கலைவாய்மைக் காவலனார். 347 |
|