அற்புதத் தேவாரத் திரட்டும்51

 

- தேவாரம்

திருக்காளத்தி - திருத்தாண்டகம்

விற்றூணொன் றில்லாத நல்கூந்தான் காண்
         வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லான்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
         மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொய் பான்காண்
         பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
         கணநாதன் காணவனென் கண்ணு ளானே.

19. காயிலைக் காட்சி

- புராணம்

1639.

பொன்ம லைக்கொடி யுடனமர் வெள்ளியம் பொருப்பிற்
றன்மை யாம்படி சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயின்முன் வந்தார்.

374

1640.

காணு மப்பெருங் கோயிலுங் கயிலைமால் வரையாய்ப்
பேணு மாலய னிந்திரன் முதற் பெருந் தேவர்
பூணு மன்பொடு போற்றிசைத் தெழுமொலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந் தனித்தனி முழங்க.

375

1641.

தேவர் தானவர் சித்தர்விச் சாதர் ரியக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலா மிடையக்
காவி மன்பொடு போற்றிசைத் தெழுமொலி பொங்கத்
தாவி லேழ்கடன் முழக்கினும் பெருகொலி தழைப்ப.

376

1642.

கங்கை யேமுதற் றீர்த்தமாங் கடவுண்மா நதிகண்
மங்க லம்பொலி புனற்பெருந் தடங்கொடு வணங்க
வெங்கு நீடிய பெருங்கண நாதர்க ளிறைஞ்சப்
பொங்கி யங்களாற் பூதவே தாளங்கள் போற்ற.

377

1643.

அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாமென வணைந்தோர்
சிந்தைசெய்திடச் செங்கண்மால் விடையெதிர்்நிற்ப
முந்தை மாதவப்பயன் பெறு முதன்மையான் மகிழ்ந்தே
நந்தி யெம்பிரானடுவிடை யாடிமுன்னணுக.

378

1644.

வெள்ளி வெற்பின்மேல் மரகத் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற் பௌவிடப் பாகங்
கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த
வள்ள லாரைழன் கண்டனர் வாக்கின்மன் னவனார்.

379

- தேவாரம்

ஸ்ரீ கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம்

வேற்றாகி விண்ணாகி நின்றாப் போற்றி மீளமே யாளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே யொளித்தாய் போற்றி யோவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே யமர்ந்தாய் போற்றி யாறங்க நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

1