ஓசை யொலியெலா மானாய் நீயே யுலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருமகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிது மினியாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ. |
1 திருவையாறு - பண் - காந்தாரம் மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடுப டாம லையா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 20. திருப்பூந்துருத்தி - திருமடம் செய்தது - புராணம் 1653. | திருப்பூந் துருத்தி யமர்ந்த செஞ்சடை யானையா னேற்றுப் பொருப்பூர்ந் தருளும் பிரானைப் பொய்யிலி யைக்கண்டேனென்று விருப்புறு தாண்டகத் தோடு மேவிய காதல் விளைப்ப "விருப்போந் திருவடிக் கீழ்நா" மென்னுங் குறுந்தொகை பாடி. |
388 1654. | அங்குறை யுந்தன்மை வேண்டி "நாமடி போற்றுவ" தென்று பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து தங்கித் திருத்தொண்டு செய்வார் தம்பிரா னாரருள் பெற்றுத் திங்களு ஞாயிறுந் தோயுந் திருமட மங்கொன்று செய்தார். |
389 21. பிள்ளையாரது சிவிகை தாங்கியது - புராணம் 1659. | காழியர்கோன் வருமெல்லைக் கலந்தெய்திக் காதலித்தார் சூழுமிடைந் திடுநெருக்கிற் காணாமே தொழுதருளி வாழியவர் தமைத்தாங்கு மணிமுத்தின் சிவிகையினைத் தாழுமுட லிதுகொண்டு தாங்குவன்யா னெனத்தரித்தார். |
394 1660. | வந்தொருவ ரறியாமே மறைந்தவடி வொடும்புகலி யந்தணனா ரேறியெழுந் தருளிவரு மணிமுத்தின் சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவா ருடன்றாங்கிச் சிந்தைகளிப் புறவருவார் தமையாருந் தெளிந்திலரால். |
395 1661. | திருஞான மாமுனிவ ரரசிருந்த பூந்துருத்திக் கருகாக வெழுந்தருளி "யெங்குற்றா ரப்ப?" ரென வுருகாநின் "றும்மடியே னும்மடிக டாங்கிவரும் பெருவாழ்வு வந்தெய்தப் பெற்றிங்குற் றே"னென்றார். |
396 1662. | பிள்ளையா ரதுகேளாப் பெருகுவிரை வுடனிழிந்தே யுள்ளமிகு பதைப்பெய்தி யுடையவர சினைவணங்க, |
|