| வள்ளலார் வாகீச ரவர்வணங்கா முன்வணங்கத் துள்ளுமான் மறிக்கரத்தார் தொண்டரெலார் தொழுதார்த்தார். |
397 - தேவாரம் திருவாவடுதுறை - திருநேரிசை மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலு மாவடு துறையா னாரே. 1 22. திருவாலவாய்த் தரிசனமும் பாண்டி நாட்டிற் சரித நிலையும் - புராணம் 1669. | எய்தியபே ரானந்த வின்பத்தி னிடையழுந்தி மொய்திகழுஞ் சடையானை "முளைத்தானை" யென்றெடுத்துச் செய்தவத்தோர் தாண்டகச்செந் தமிழ்பாடிப் புறத்தணைவார் கைதொழுது பணிந்தேத்தித் திருவுள்ளங் களிசிறந்தார். |
404 1676. | தொழுதுபல வகையாலுஞ் சொற்றொடைவண் டமிழ்பாடி வழுவிறிப் பணிசெய்து மனங்கசிவுற் றெப்பொழுது மொழுகியகண் பொழிபுனலு மோவாது சிவன்றாள்க டழுவியசிந் தையிலுணர்வுந் தங்கியநீர் மையிற்சரித்தார். |
411 - தேவாரம் திருவாலவாய் - திருத்தாண்டகம் முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகில்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கண் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே. 11 23. திருப்புகலூர் - புராணம் 1678. | பொய்கைசூழ் பூம்புகலூர்ப் புனிதர்மலர்த் தாள்வணங்கி நையுமனப் பரிவினொடு நாடோறுந் திருமுன்றிற் கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன் வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ்மா லைகண்மொழிவார். |
413 - தேவாரம் நின்ற திருத்தாண்டகம் இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி யியமான னாயெறியுங் காற்று மாகி யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் |