பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி றெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே. |
1 குறைந்த திருநேரிசை வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுட் சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன் நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ இன்றுளேன் நாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே. 1 ஆருயிர்த் திருவிருத்தம் எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென் றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால் அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே. 1 24. திருப்புகலூர் - பொன்னும் மணியும் புல்லும்வேறுபாடின்றிக்கண்டது - புராணம் 1681. | அந்நிலைமை தனிலாண்ட வரசுபணி செய்யவவர் நன்னிலைமை காட்டுவார் நம்பர்திரு மணிமுன்றி றன்னில்வரு முழவாரா நுழைந்தவிடந் தானெங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க வருள் செய்தார் |
416 1682. | செம்பொன்னு நவமணியுஞ் சேண்விளங்க வாங்கெவையு மும்பர்பிரான் றிருமுன்றி லுருள் பருக்கை யுடனொக்க வெம்பெருமான் வாகீச ருழவாரத் தினிலேந்தி வலபலர்மென் பூங்கமல வாவியினிற் புகவெறிந்தார். |
417 25. திருப்புகலூர் - அரம்பையரை இருவினைகளின் வடிவாகக் கண்டது - புராணம் 1685. | கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய வுற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழி பொருகயற்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடிநுடங்கி யாடுவபோ லாடுவார். |
420 1687. | இத்தன்மை யரம்பையர்க ளெவ்விதமுஞ் செயல்புரிய வத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா வன்புருகு மெய்த்தன்மை யுணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தஞ் சித்தநிலை திரியாது செய்பணியின் றலைநின்றார். |
422 1688. | இம்மாயப் பவத்தொடக்கா மிருவினைக டமைநோக்கி "யும்மாலிங் கென்னகுறை யுடையேன்யான் றிருவாரு ரம்மானுக் காளானே னலையேன்மி னீ"ரென்று "பொய்ம்மாய்ப்பெருங்கடலு" ளெனுந்திருத்தாண்டகம்புகன்றார். 423 |
|