- தேவாரம் திருவாரூர்த் திருத்தாண்டகம் பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்கா டீவினைகா டிருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க் கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றே னிடையிலேன் கெடுவீர்கா ளிடறேன் மின்னே. 1 26. திருவடிக்கீ ழெய்தியது - புராணம் 1681. | மன்னியவந் தக்கரண மருவுதலைப் பாட்டினாற் "றன்னுடைய சரணான தமியேனைப் புகலூர னென்னையினிச் சேவடிக்கீ ழிருத்திடு"மென் றெழுகின்ற முன்னுணர்வின் முயற்சியினாற் றிருவிருத்தம்பலமொழிந்தார். |
426 1692. | மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே" னெனப்புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி யண்ணலார் சேவடிக்கீ ழாண்டவர சமர்ந்திருந்தார். |
427 - தேவாரம் திருப்புகலூர் - திருவித்தம் தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் னடியடையப் புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினைக் கட்டறுத் தேழ்நரகத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. 1 திருப்புகலூர் - திருத்தாண்டகம் எண்ணுகே னென்சொல்லி யெண்ணு கேனோ வெம்பெருமான் றிருவடியே யெண்ணி னல்லாற் கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் கழலடியே கைதொழுது காணி னல்லா லொண்ணுளே யொன்பது வாசல் வைத்தா யொக்க வடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா வுன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 1 ஒருவனையு மல்லா துணரா துள்ள முணார்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற இருவரையு மூவரையு மென்மே லேவி யில்லாத தரவறுத்தாய்க் கில்லே னேலக் கருவரைசூழ் கான லிலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையா யுன்னடிக்கே போது கின்றேன் பூம்புலூர் மேவிய புண்ணியனே. திருச்சிற்றம்பலம் |