பெயர் விளக்கம்61

 

முற் சேர்க்கை - 3

பெயர் விளக்கம்

அஞ்செழுத்து, 1391, 1392, 1394, 1395, சீ பங்சாக்கர மந்திரம்.

அப்பர், 1447, 1451, திருநாவுக்கரசு நாயனாருக்கு ஆளுடைய பிள்ளையார் இட்டழைத்த பெயர்.

அப்பூதியடிகள், 1465, அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர்; திருநாவுக்கரசு நாயனாரிடத்து அன்பு பூண்டொழுகிய, திறத்தால் முத்தி பெற்றவர். அவர் புராணம் பார்க்க.

அரசு 1341, 1392, 1394, 1450, 1529, 1546, 1562, 1661, திருநாவுக்கரசர்.

அரம்பையர் 1687, தேவலோக நடன மாதர்.

அற்புதப் பொற்கோயில் 1544, திருவாய்மூருக்குத் தெற்கில், அணிமையில் உள்ள தலம். இறைவர் திருநாவுக்கரசருக்குத் திருவுருக்காட்டி மறைந்த இடம் 471 பக்கம் பார்க்க.

ஆண்ட அரசு 1359, 1362, 1383, 1410, 1446, 1454, 1466, 1468, 1482, 1497, 1523, 1535, 1538, 1548, 1667, 1681, 1692, 1694, திருநாவுக்கரசர்; ஆண்ட - ஆட்கொள்ளபட்ட.

ஆலால சுந்தரர் 1276, ஆளுடைய நம்பிகளுடைய முன்னைநிலைப் பெயர். இராமன் 1673, தசரதன் மகன்; திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றென்ப; இராவணனைக் கொன்ற பழி போகும்படி, இராமேச்சுரம் அமைத்துச் சிவனை வழி பட்டவர்.

இராவணன் 1340, 1673, இராமனாற் கொல்லப்பட்ட அசுரன்; இராமாயண வரலாறு பார்க்க; கயிலை மலையைப் பேர்க்க முயன்று, மலைக்கீழ்ச்சிக்கிப், பல காலம் அழுது கொண்டிருந்த காரணத்தால் இராவணன் (அழுகின்றவன்) என்ற பெயர் பெற்றான்; பின்னர்ச் சாமகீதம் பாடிச் சிவனருள்பெற்றான். தேவாரப் பதிகங்களுள் இவ்வரலாறுகள் பேசப்பட்டன. பக்கம், 97.

இலங்கை 1673, பரதகண்டத்திற்குத் தெற்கில் உள்ள தீவு; இராவணன் ஆண்ட நாடென்பதும், சூரபதுமன் நகருக்கு வடக்குவாயிலென்பதும் வரலாறு.

இலாடம் 1617, வடநாடுகளுள் ஒன்று.

உமையம்மையார், மைவாச நறுங்குழல் மாமலையாள் - 1338 - வெற்பரையன் பாவை - 1442 - அம்மை - 1443; அம்பிகை - 1448; உலகமெல்லாமீன்றாள் - 1450; பெரிய பெருமாட்டி - 1452; குன்றமகள் - 1458; பாலூரு மின்மொழியாள் 1481; வாராரு முலை மங்கையுமை - 1493; பொருப்பரையன் மடப்பாவை 1495 - 1509- வார்திகழ் மென்முலையாள் - 1505; பண்ணினேரு மொழியாள் 1533; இமயப்பாவை - 1525; மலையாள் - 1536; தையல் - 1582; பெண் - 1593; மங்கை - 1622; வண்டுலாங்குழல் மலைமகள் - 1629; பொன்மலைக்கொடி - 1639; சத்தி - 1639; மரகதக்கொடி - மாமலையாள் - 1644; நாதர்தம்துணை - 1647; மலையான்மகள் - 1649.

எழுத்தறியும் பெருமான் 1600, திருவொற்றியூர் இறைவரது பெயர்.

கங்கை 1618, தெய்வப் பேராறு.