62பெயர் விளக்கம்

 

கச்சித்திருமயானம் 1590, தொண்டைநாட்டுத் தேவார வைப்புத் தலம்; தலவிசேடம் - பக்கம் 549.

கச்சித்திருமேற்றளி 1591 தொண்டை நாட்டுத்தலம்; பக்கம், 550.

கண்ணப்ப நாயனார் 1611 அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; அவர் புராணம் பார்க்க.

கலிப்பகையார் 1288, 1290, 1295, 1296; திலகவதியம்மையாருக்கு மனம் பேசி இசைந்த மணமகனார்.

கயிலை 1696, திருக்கயிலாயமலை; தலவிசேடம் பக்கம் 626.

கருநடம் 1615 வடநாடுகளுள் ஒன்று.

கனகப்பொது, 1430, பொன்னம்பலம்.

காஞ்சி 1582, காஞ்சிபுரம் என்றும், திரு ஏகம்பம் என்றும் தேற்றமாய் விளங்கும் தொண்டை நாட்டுத்தலம்; தலவிசேடம் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திறுதியிற் காண்க.

காடவன் 1411 பல்லவச் சோழமரபு அரசர்களின் குலப்பெயர்.

காழி 1443 - சீர்காழி.

குங்கலியக்கலய நாயனார் 1512 அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்; அவர் புராணம் பார்க்க.

குணபர வீச்சரம் 1411, பாடலிபுத்திரத்தில் இருந்த சமண் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக்கொண்டு வந்து மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன், சைவச் சார்பு பெற்றபின், திருவதிகையிற் எடுப்பித்த கோயில்; பக்கம் 200.

குலச்சிறையார் 1549, 1665, 1670, 1694; குலச்சிறை நாயனார்; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். அவர்தம் புராணமும், திருஞான சம்பந்த நாயனார் புராணமும்
பார்க்க.

குறுக்கையர்குடி 1280, திருநாவுக்கரசு நாயனார் அவதரித்த குடி. (கோத்திரம் என்பது வடமொழி)

கூனிமிர்ந்த தென்னவனார் 1670; நின்றசீர்நெடுமாற நாயனார்; அறுபத்து மூன்று. நாயன்மார்களுள் ஒருவர். அவர்தம் புராணமும் திருஞானசம்பந்த நாயனார் புராணமும்
பார்க்க.

சதயம் 1693, திருநாவுக்கரசர் சிவனடி சேர்ந்த நாள்.

சித்திரை 1693, மாதங்ளுள் ஒன்று; திருநாவுக்கரசர் சிவனடி சேர்ந்த மாதம்.

சிவசின்னம் 1308, 1342, திருநீறும் உருத்திராக்கமும்.

சிவபெருமான் :- மணிகண்டர் - 1276; சிவம் - 1277; மின்னார் செஞ்சடையண்ணல் - 1287; நம்பர் - 1302; 1462; 1472; 1480; 1494; 1540; 1572; 1614; 1681; நாதன் - 1301; பிஞ்ஞகன் - 1307; செம்வளக்குன்று 1308; சுடரொளி - 1311; பவமொன்றும் வினைதீர்ப்பார் - 1312; மழவிடையார் 1313; கண்டரு நெற்றியர் - 1314; ஆளுடைய தம்பெருமான் - 1329; கற்றை வேணியர் 1330; கழலடைந்தோர் பற்றறுப்பார் - 1330; நினமலன் - 1311; திருக்கயிலைக் குன்றுடையார் - 1331; திருவாளன் - 1332; ஆறணிந்தார் - 1333; செங்கனக வரைச்சிலையார்; தம்பிரான் - 1334; மாற்றார் புரமாற்றிய வேதியர் - 1335; செந்நின்ற பரம்பொருள் - 1336; முதல்வன் - 1362; மைவாச நறுங்குழ