சிவமுன் பயின்மொழி 1425, அரனாமம். சிவம் 1427, 1442, 1448, இறைவரின் தன்மை. சிவன் அஞ்செழுத்து 1390, 1395, 1635, ஸ்ரீ பஞ்சாக்கரமென்னும் மகாமந்திரம். "நமச்சிவாய" என்று அற்றமுன் காக்கும் மஞ்செத்து 1391; அமரர் வாழ்த்து தற்கரிய வஞ்செழுத்து 1392; அருளுமஞ்செழுத்து 1399; வருநாமத்தஞ்செழுத்து 1499. சிறுத்தொண்டர் 1507 அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர். அவர் புராணம் பார்க்க. சுவாமிமலை 1481; முருகப்பெருமானது படைவீடு?; அவற்றுளொன்றாகிய திருவேரகம் என்று வழங்குவது; பக்கம் 342. சூலை 1313, 1446, வயிற்றினிடம், கொடுவேதனை செய்து குடைந்து முடக்கும் ஒரு நோய். சைவநெறி 1277, 1553, தெய்வநெறிச் சிவம் 1277, தூய சிவ நன்னெறி 1306, சிவமொன்றுநெறி 1312, மெய்தருவா னெறி 1326, சிவநெறி 1334, திருநெறி 1395, அருணெறி 1398, சைவநெறி வைதிகம் 1551, ஆதிசைவ நெறி 1551. தண் பொருந்தம் 1664. தாம்பிரபன்னி ஆறு. தண்பொருந்தப் புளனாடு 1664, பாண்டிநாடு. தருமசேனர் 1304, 1315, 1319, 1345, திருநாவுக்கரசு நாயனார் முன் சமண் சார்பிலிருந்தபோது அவருக்குச் சமணர் இட்டபெயர்; பக்கம் 52. தமிழ்நாடு 1665, 1675, 1677, பாண்டிநாடு. தான்தோன்றி மாடம் 1514, திருஆக்கூாரில் கோயிலின் பெயர். திங்களூர் 1465, 1466, 1475, அப்பூதியடிகளது தலம்; தலவிசேடம் பக்கம் 315. திரு, 1282 இலக்குறி; உமையம்மையாருமாம். திருஅண்ணாமலை 1576 நடுநாட்டுத்தலம்; தேற்றமாயறியப்படுவது; பக்கம் 534. திருஅம்பர் 1511, சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 414. திருஅன்பிலாலந்துறை 1556 சோழ நாட்டுத் தலம்; பக்கம் 506. திருஆக்கூர் 1513 பக்கம் 422. திருஆமாத்தூர் 1413 நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று தலவிசேடம் பக்கம் 202. திருஆவூர்ப்பசுபதீச்சரம் 1463, சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 313. திருஎதிர்கொள்பாடி 1455, சோழ நாட்டுத்தலம்; தலவிசேடம் பக்கம் 289. திருஎல்லை 1422, 1444, தில்லையின் நாற்புறமும் ஒருகாத அளவிலுள்ள அமைப்பு. திருஎறும்பியூர் 1567, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 515. திருக்கடவூர் 1512, சோழநாட்டுத்தலம்; திருக்கடவூர் வீரட்டம் எனப்படும்; தலவிசேடம் பக்கம் 418. திருக்கடவூர்த் திருமயானம் 1513 பக்கம் 418. திருக்கண்டியூர் 1556, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 508. திருக்கயிலைமலை 1612 சிவபெருமான் வீற்றிருக்கும பெருமலை; திருமலை என்று தேற்றமாய் அறியப்படும். திருக்கருகாவூர் 1463 சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 313. திருக்கருப்பறியலூர் 1454, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 278. |