பெயர் விளக்கம்67

 

திருக்கழிப்பாலை 1437, 1439, சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 245.

திருக்கழுக்குன்று 1595 தொண்டை நாட்டுத் தலம்; பக்கம் 559.

திருக்கழுமலம் 1442, சீகாழியின் பன்னிரண்டு பெயர்களுள் இறுதிப் பெயர்; 254 பக்கம் பார்க்க.

திருக்கற்குடி 1567 சோழ நாட்டுத் தலம்; பக்கம் 517.

திருக்காரிகரை 1608, தொண்டை நாட்டுத் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று; பக்கம் 580.

திருக்காளத்தி 1608, தொண்டை நாட்டுத் தலம்; கண்ணப்ப நாயனார் புராணம் பார்க்க. தென்கயிலை எனப்படும்.

திருக்கானப்பேர் 1675, பாண்டி நாட்டுத் தலம்.

திருக்கானூர் 1556, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 516.

திருக்குடந்தைக்காரோணம் 1481, பக்கம் 346.

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் 1481, பக்கம் 346.

திருக்குடழக்கு 1480, சோழ நாட்டுத் தலம்; கும்பகோணம் என்று தேற்றமாக அறியப்படுவது.

திருக்குடவாயில் 1481, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 348.

திருக்குறுக்கை 1454, சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. சிவபெருமானது வீரட்டானங்களுள் ஒன்று. காமனை எரித்த தலம்; தலவிசேடம் பக்கம் 282.

திருக்கெடிலம் 1401, நடுநாட்டுத் தலங்களின் வழிச் செல்லும் பெரிய ஆறு. "தென்றிசைக் கங்கை" என்று தேவாரத்துட் போற்றப்படுவது.

திருக்கோடிகா 1455, சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 291.

திருக்கோலக்கா 1454, சோழ நாட்டுத் தலம்; சீகாழிக்குத் தென் மேற்கில் அரை நாழிகை யளவில் உள்ளது. I - பக்கம் 311. தலவிசேடம் - பார்க்க.

திருக்கோவலூர் 1413, நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று; தல விசேடம் பக்கம் 204.

திருச்சத்திமுற்றம் 1457, 1458, சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 308.

திருச்சாத்தமங்கை 1505, சாந்தை என்பது; இப்போது சீயாத்த மங்கை என வழங்கப்படுகிறது. அரவந்தி என்பது கோயிலின் பெயர். திருநிலநக்க நாயனாரது தலம். அவர் தம் புராணம் பார்க்க. "நீலாக்க னெடுமாநகர்" என்று ஆளுடைய பிள்ளையாராற் போற்றப்பட்ட சிறப்புடையது; நீலநக்கர் மனைவியார் திருவுருவங்கள் அம்மையார் கோயிலிற்றான் கட்டப்பட்டுள்ளன; சுவாமி அயவந்திநாதர், அம்மை மலர்க்கண்ணியம்மை, பதிகம் 1. அயவந்தி என்ற பெயர் பிரமனாற் பூசிக்கப்பட்டது என்ற பொருள் தருகின்றது. இது திருமருகலுக்கு வடகிழக்கே மட்சாலை வழி ஒரு நாழிகையளவில் அரிசொல் ஆற்றுக்கு வடகரையில் உள்ளது. ஆற்றுக்குப் பாலமுண்டு.

திருச்சிராப்பள்ளிமலை 1567, சோழநாட்டுத் தலம்; பக்கம் 516.

திருச்செங்காட்டங்குடி 1505, சோழநாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 404.

திருச்செம்பொன்பள்ளி 1455, சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று.

திருச்சேறை 1481, சோழநாட்டுத் தலம்; பக்கம் 348.

திருச்சோற்றுத்துறை 1477, சோழநாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 335,