சில தலக் குறிப்புகள்75

 

49.

புறப்பொருள் வெண்பாமாலை 1540, 1630.

50.

பேரூர்ப் புராணம் 1431, 1614.

51.

பொன்வண்ணத்தந்தாதி 1335,1381,1409,1403,1461,1464,1519, 1617.

52.

போற்றிக் கலிவெண்பா 1481.

53.

போற்றிப் பஃறொடை 1490.

54.

விநாயகர் இரட்டைமணிமாலை 1266, 1271.

சில தலக் குறிப்புக்கள்

1. திருமுண்டீச்சரம் - நடுநாட்டு 19-வது தலம். திருக்கிராமம் என்று வழங்கப்படுவது. நெல்லிக்குப்பத்துக்கு வடமேற்கில் உள்ள திருக்கண்டீச்சரம் என்ற கோயிலுடன் மயங்கியறிதற்பாலதன்று. பிரமன் - இந்திரன் முதலியோர் பூசித்தது. சுவாமி முண்டீச்சுரர் - அம்மை - கானார்குழலி. பதிகம் 1. திருத்தாண்டகம். திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கில் 3 நாழிகை.

2. குரக்குக்கா - சோழ நாட்டில் காவிரிக்கு வடகரை 28-வது தலம். அனுமன் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. சுவாமி - குந்தளேசுவார்; அம்மை - குந்தளநாயகி. மேலைக் காழி - தலைஞாயிறு - என வழங்கும் திருக்கருப் பறியலூருக்கு வடக்கே மட்சாலை வழி 3/4 நாழிகை. ஆற்றைப் பரிசினாற் கடக்க வேண்டும். ஆற்றில் முதலை முதலியன உண்டு. பதிகம் 1. குறுந்தொகை.

3. திருநீலக்குடி - மேற்படி காவிரிக்குத் தென்கரை - 32-வது தலம். "தென்னங்குடி" யென வழங்குவது தேவகன்னியர் வருணன் இவர்கள் பூசித்த தலம். சுத்தமாகிய நல்லெண்ணெய் சுவாமி திருமேனியில் அபிடேகித்து முழுக்காட்டினால் பாதியெண்ணெய் இலிங்கத்தினுள் சுவறி விடுவதாக ஐதிகம். இக்காரணத்தால் சுவாமி தைலம்மாட்டேசுவரர் என்றும் அம்மை சிஸ்ரூஷாம்பிகை என்றும் வழங்கப்பெறுவர். பதிகம் 1. குறுந். ஆடுதுறை நிலையத்திற்குத் தெற்கே மட்சாலை வழி 2 நாழிகை.

4. கருவிலி - இது கொட்டிட்டை என்ற கோயிலின் பெயருடன் சேர்த்து வழங்கப்பெறும். "கருவேலி" என்பர். கருப்பிணி தீர்க்கும் பெருமானது ஊர் என்பது பெயர்ப் பொருள். சுவாமி - சற்குணநாயகர் : அம்மை - சார்வாங்க நாயகி பதிகம் 1. குறுந்தொகை. கும்பகோணத்திற்குத் தென்கிழக்கிலுள்ள நாச்சியாார் கோயிலுக்கு வடகிழக்கில் 5 நாழிகையில் பூந்தோட்டம் மட்சாலையில் அரிசொல்லாற்றுக்கு வடகரை.

5. கடுவாய்க்கரைப்புத்தூர் - மேற்படி காவிரிக்குத் தென்கரை 67-வது தலம். "கடுவாய்" நதிக்கரையில் உள்ளது. ஆண்டார் கோயில் என வழங்கப்படும். காசிபர் பூசித்தது. சுவாமி - சுவர்ணபுரீசுவார். நீடாமங்கலம் கற்சாலையில கும்பகோணத்திலிருந்து 2 நாழிகையில் சாக்கோட்டையையும், பின் தெற்கே 1 நாழிகையில் திருக்கருக்குடியையும், பின், மேற்கே 2 நாழிகையில் வலங்கியமானை