ஆன்ம ஈடேற்றத்திற்கு ஒப்பற்ற தெய்வமாம் இயேசுவின்
வாழ்க்கை வரலாற்றைத் 'திரு அவதாரம்' எனும் காவியமாகத் தந்து பொன்றாப்
புகழ் பெற்ற மறைதிரு ஆசீர்வாதம் அவர்கள் வாழ்க்கை வரலாற்றினை எழுதும்
வாய்ப்புக் கிட்டியமைக்குப் பெருமிதங்கொள்கிறேன்.
1 |
சிங்காரக் குடும்பமே பாப்பா - இயேசுவின்
சீரான குடும்பமே பாப்பா
திரு நெல் வேலிச் சீமையிலே பாப்பா - இயேசுவின்
'திரு அவதாரம்' தந்தவரே பாப்பா. |
|
|
2 |
ஆசீர்வாதம் குடும்பமே பாப்பா - நல்ல
ஆசையான குடும்பமே பாப்பா
இயேசுவின் ஆசீர்வாதம் பாப்பா - என்றும்
இனித்திடக் காணலாம் பாப்பா. |
என்று பாடும் கவிஞன் கூற்று பொய்க்காதன்றோ!
மறைதிரு ஆசீர்வாதம் ஐயரவர்களுடைய முன்னோர்கள் டோனாவூர்க் கண்மையிலுள்ள
சூரங்குடி எனும் பதியில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தவர்களாவர்கள்.
அக்குடும்பத்தில் உயர்திரு சுவாமிநாதபிள்ளை யென்னும் ஐயரவர்களின்
பாட்டனாரே முதன் முதல்
கிறித்துவை ஏற்று அவர் நாமமகிமைக்காக வாழ்ந்தவராவார்கள். அவ்வமையம்
அவர்களடைந்த இன்னல்கள் பலப்பல. |