முகப்பு iv

தொடக்கம்


துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னமே நிலைகுலைந்து விட்டபடியால், இவரும் இவரது முன்னோர் சிலரும் தமது தொல்லைத் தலை நகராயிருந்த மதுரையைவிட்டு, அடுத்துள்ள கொற்கை என்னும் ஊரிலிருந்து குறுநில மன்னராய் ஆட்சி செலுத்தி வந்தனர். இது, இந் நூலாசிரியர் இயற்றிய வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை என்னும் நூலின் தற்சிறப்புப் பாயிரமாகிய

 
‘வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்சொல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைந்தோர் குறைவிலர் தாமே’

என்பதாலும் அறியக் கிடக்கிறது. இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். உடன்பிறந்தார் இருவரும் தமிழ் மொழியிற் சிறந்த புலமை யுடையவர்கள். இவ் வந்தாதியும் இதனோ டொத்த வேறிரண்டு அந்தாதிகளும் வரதுங்க ராம பாண்டியர் இயற்றியவாகக் கூறுவாரும் உளர். அதிவீர ராம பாண்டியர் இயற்றியவை இவை என்பதே பெரும்பாலோர் கூற்று. திருக் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக் கருவைக் கலித்துறை யந்தாதி, திருக் கருவை வெண்பா வந்தாதி, நறுந்தொகை என்னும் இந் நான்கு சிறுநூல்களை யல்லாமல் நைடதம், கூர்மபுராணம், இலிங்க புராணம், காசிகாண்டம் என்னும் நான்கு பெருநூல்களை இவர் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்துப் பாடியுள்ளார். இதனால் இவருக்கு வடமொழிப் புலமையும் உண்டென்பது புலனாம்.

இவர் இயற்றிய நூல்களால் இவர் நுண்ணறிவும் நிறைந்த கல்வித் தேர்ச்சியும் உடையரென்பது நன்கு விளங்குகின்றதோடு, இவருக்கு எய்திய கவித்திறம் இயற்
 


முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்