ஆத்மாநாம் படைப்புகள்
கவிஞர் என்கிற ஒற்றை அடையாளத்தை மட்டும் ஆத்மாநாம்
(1951-1984)விரும்பியிருக்கமாட்டார். அவர் உயிருடனிருந்தபோது ஒரு இலக்கியவாதி
என்று அழைக்கப்படுவதையேவிரும்பினார். ஏனெனில் அவர் ழ என்ற கவிதை ஏட்டின்
ஆசிரியராக இருந்தார். மொழிபெயர்ப்பாளராக,கட்டுரையாளராக மற்றும் விமர்சகராகவுமிருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்தகவிஞர்கள் பெரும்பாலும் தம்மை ஒரு
இயக்கத்துடன் பிணைத்துக்கொண்டவர்கள். அவருக்குஓவியத்திலும் இசையிலும்
இருந்த ஈடுபாடு அளவற்றது. தமிழ்நாட்டின் சமகால ஓவியர்களுடன்அவர் கொண்டிருந்த
நட்பு குறிப்பிடத்தக்கது. சிறந்த கவிதையின் இதயத்தில் ஒருஅரூப நடனமிருக்கிறது
என்கிறார்கள் சிலர். கவிதையின் இதயம் ஒரு “நிச்சலன மௌனம்” என்கிறார்கள்
வேறு சிலர். இதில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விஷயம்தான் ஆத்மாநாமின்கவிதைகளுக்குச்
சாலப் பொருந்துகிறது.
பிரம்மராஜன் (1953)
கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் அரசுக்கல்லூரி
ஒன்றில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். மீட்சி என்ற
இலக்கிய சிற்றிதழை நடத்தியவர். இதுவரை ஐந்து கவிதைத் தொகுதிகளும் ஒரு
கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. எஸ்ரா பவுண்ட் (1985)பற்றிய அறிமுக
நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். உலகக் கவிதை (1989) நூலின் தொகுப்பாளர்.
போர்ஹே கதைகள் (2000) இவரது மற்றொரு மொழிபெயர்ப்பு நூல். |