3
படைப்புகளை ஒருசேர வெளியிட வாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம்
கற்பனை கூட செய்யவில்லை.

பல்கலைக்கழக மானியம் பெற்று        ஒரு ஆய்வு அறிக்கை
தயாரிக்க நாங்கள் தஞ்சைதமிழப்       பல்கலைக்கழகம், காரைக்குடி
அழகப்பா பல்கலைக் கழகம், மறைமலை அடிகள் நூல்நிலையம் எனப்
பல இடங்களுக்குச் சென்றபோது எங்கள்    ஆய்வைத்தாண்டி வேறு
செய்திகளையும் சேகரிக்க முயற்சி செய்தோம். அப்போதுகவிமணியின்
தரிசனம் கிடைத்தது. கவிமணியின்           தொகுப்புகளில் வராத
பாடல்களைப் பழைய இதழ்களில் பார்த்தோம்.   அவை எழுதப்பட்ட
நோக்கமும், காலமும் நூல் வடிவில் வந்த கவிமணியின்தொகுப்புகளில்
சேர்க்கப்படவில்லை என்பதையும் கண்டோம்.

இப்படியாகத் தற்செயலாக நாங்கள்     தொகுத்த கவிமணியின்
கவிதைகள் நூற்றுக்கு மேல்    இருப்பதைக் கண்டோம். கவிமணியின்
நூல் வடிவில் வராத சில கட்டுரைகளும்    கிடைத்தன. ஏற்கெனவே
எங்கள் ஆய்வு தொடர்பான      கவிமணியின் ஆங்கிலக் கட்டுரை
ஒன்றைத் தேடிய போது அவரது    14 ஆங்கிலக் கட்டுரைகளையும்
தொகுத்தோம்.

கவிமணியின் தொகுப்புகளில்        இல்லாத பாடல்களையும்,
வெளியாகாத 5 கட்டுரைகளையும், ஒரு பேட்டியையும் “நூல் வடிவில்
வராத கவிமணியின் படைப்புகள்” என்னும் தலைப்பில் 95 பக்கங்கள்
கொண்ட சிறு நூலாக         வெளியிட்டோம் (1999) இந்த  நூலை
வெளியிட்ட ஸ்ரீ செண்பகா பதிப்பக       உரிமையாளர்  சண்முகம்,
கவிமணியின்    ஆங்கிலக் கட்டுரைகளையும் தமிழில் கொண்டு வர
ஆர்வம் காட்டினார். கவிமணி குறித்து நாங்கள் முதலில் வெளியிட்ட
நூலைப் படித்த டாக்டர் தே.வேலப்பன் அவர்களும்    கவிமணியின்
ஆங்கிலக் கட்டுரைகள்       தமிழில் வர வேண்டிய அவசியத்தை
வற்புறுத்தினார். கவிமணி    எழுதிய 14 ஆங்கிலக்கட்டுரைகளையும்
“கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்”   என்ற தலைப்பில்
வெளியிட்டோம். (2001 மார்ச்) அதுவரலாற்று ஆய்வாளர்களிடம் கூட
பெரும் வரவேற்பைப் பெற்றது.     192 பக்கங்கள் கொண்ட அச்சிறு
நூலும் எங்களின் முந்திய நூலும்      வேகமாக விற்பனையாவதைக்
கண்ட ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தார் கவிமணியின் கவிதைகளை ஒரே
தொகுதியாகக் கொண்டு வர விரும்பினர்.

எங்கள் முந்திய இரு    நூற்களைப் படித்த நாஞ்சில் நாட்டுத்
தமிழறிஞர் கு.பச்சைமாலின்     தூண்டுதலால்  கவிமணியின் பேரன்
திரு.குற்றாலம் பிள்ளை         கவிமணியின்  ஊரான புத்தேரியில்
எங்களுக்குப் பாராட்டுக் கொடுத்தார்.         கவிமணியின் பேரில்
அறக்கட்டளை நிறுவிப் பெருமளவு