6

இப்போது கவிமணியின்      கவிதைகள் மலரும் மாலையும்,
மருமக்கள் வழிமான்மியம்,    ஆசியஜோதி, உமர்கய்யாம்பாடல்கள்,
தே.வி.யின் கீர்த்தனங்கள்   என்னும் ஐந்து தொகுதிகளாக உள்ளன.
இந்த ஆய்வுப் பதிப்பில்    இந்த வரிசைப்படியே கவிதை நூற்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இது காலவரிசைப்படி அமைந்தது.

மலரும் மாலையும் தொகுதியில்     உள்ள உள் தலைப்புகள்,
அவை அடங்கிய பாடல்களின்     பொருள்களின் தன்மைக்கேற்ப
மாற்றப்பட்டுள்ளன. சில         தலைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் பாடல்கள் வெளிவந்த   இதழ்களில் கொடுக்கப்பட்ட
தலைப்புகளுக்கு முக்கியத்துவம்        கொடுக்கப்பட்டுள்ளது. சில
பாடல்களின் தலைப்புகள் கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில்
அமைக்கப்பட்டுள்ளன.

மலரும் மாலையும் தொகுதியில்    கதம்பம் தலைப்பில் உள்ள
வேளாளர் பாக வழக்குப்     பாடல்கள் மருமக்கள் வழி வேளாளர்
ஒழிப்புதொடர்பானவை. இவை         வேளாளர்மித்திரன் இதழில்
வெளிவந்தவை. எனவே இந்தப் பதிப்பில்  இப்பாடல்கள் மருமக்கள்
வழி மான்மியத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன   .பாரிநிலையப்
பதிப்பு மலரும் மாலையும்     தொகுதியில், வேளாளர் பாகவழக்குப்
பாடல்களைத் தவிர்த்து 1269    பாடல்கள் உள்ளன. இந்த ஆய்வுப்
பதிப்பில் 119 புதிய பாடல்கள்         சேர்க்கப்பட்டுள்ளன. இவை
பெரும்பாலும் 1940க்கும்1955க்கும் இடைப்பட்ட இதழ்களில் வந்தவை.
சில கவிமணியின் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
கையெழுத்துப் பிரதிகளில் உள்ள        பாடல்களும் ஏற்கெனவே
இதழ்களில் வந்த பாடல்களும்          மலரும் மாலையும்தாகுதிப்
பாடல்களுடன் ஒப்பு              நோக்கப்பட்டுள்ளன. அவற்றின்
பாடபேதங்களும், இப்பதிப்பில் குறிக்கப்பட்டுள்ளன.

பாரிநிலையப் பதிப்பு மலரும் மாலையும் தொகுதியில் 96 அடிக்
குறிப்புகள் உள்ளன.           இவற்றில் 60  அடிக்குறிப்புகள் சில
மாற்றங்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டன.  மேலும் இந்த ஆய்வுப்
பதிப்பில் 196 அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இப்பதிப்பில் மலரும்      மாலையும் பாடல்கள் தலைப்புகளின்
தன்மையின் அடிப்படையில் இருந்தாலும், பாடல்கள்காலமுறைப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் பெரும்பாலானவை வெளிவந்த
இதழ்களும், அவற்றின்  காலங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.
தமிழன் பத்திரிகையில் மருமக்கள்வழி   மான்மியம் வெளிவந்தபோது,
அந்த இதழின் ஆசிரியர்         முத்துசாமிப் பிள்ளை எழுதியிருந்த
பத்திராதிபர்