5

பின்னர் குமரன் பத்திரிகை   ஆசிரியர்     சொ.முருகப்பா
கவிமணியின் விதைகளை ஒரே தொகுப்பாகக் கொண்டுவர முயற்சி
செய்திருக்கிறார். ஆனால் அது ஆரம்பத்திலேயே  நின்று விட்டது
என்பதை ஒரு  கட்டுரையில் அவரே கூறியிருக்கிறார்.
(குமரன் 13-5-1943)

கவிமணியின் எல்லாக்  கவிதைகளையும் ஒரே தொகுதியாகக்
கொண்டுவர வேண்டும் என்று    வையாபுரிப்பிள்ளை விரும்பினார்.
இது 1937 அளவில் நடந்த முயற்சி, வையாபுரிப்பிள்ளை அப்போது
லெக்சிகன் வேலையை முடித்து சென்னையில் இருந்தசமயம், அவர்
அப்போது தமிழறிஞர் மு.அருணாசலத்தைத்   தூண்டி,கவிமணியின்
பாடல்களைத் தொகுக்கச் செய்தார்.   ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணிய
பிள்ளையும், இத்தொகுதிக்குச்         சில பாடல்களை அனுப்பிக்
கொடுத்திருக்கிறார்.        இத்தொகுதியைக் காரைக்குடி புதுமைப்
பதிப்பகத்தார் 1938 அளவில் வெளியிட்டனர்.

இந்தப் பதிப்பில் அஞ்சலி,       இலக்கியம், ஆசிய ஜோதி,
இயற்கை இன்பம்,      உள்ளமும் உணர்வும், வையமும், வாழ்வும்,
மழலைமொழி, சமூகம், தேசியம், கதம்பம் எனப் பத்து  பிரிவுகளின்
கீழ் 70 தலைப்புகளில்            அடங்கிய பாடல்கள் இருந்தன.
இத்தொகுதியில் உமர் கய்யாமின் பாடல்கள் சிலவும் இருந்தன.

மலரும் மாலையும் தொகுதியின்    இரண்டாம் பதிப்பு 1941ல்
வந்தது. பின் தொடர்ந்து 1944ல்         மூன்றாம் பதிப்பும், 1951ல்
நான்காம் பதிப்பும் வெளிவந்தன. இதற்கிடையில் 1941ஆம்ஆண்டில்
ஆசியஜோதி தனிநூலாக வந்தது. அடுத்த ஆண்டு (1942) மருமக்கள்
வழி மான்மியம் வெளிவந்தது.       1945ல் கோட்டாறு கவிக்குயில்
நிலையத்தார் தெ.பா.பெருமாளின் உதவியுடன் உமர்கய்யாம்பாடல்கள்
முழுவதையும் நூலாக வெளியிட்டனர்.

இந்த நிலையில்        வையாபுரிப்பிள்ளையின் முயற்சியில்
கவிமணியின் நூற்களை             வெளியிட பாரிநிலையத்தார்
ஒப்புக்கொண்டனர்.பதிப்பு வேலைகளை    வித்துவான்மு.சண்முகம்
பிள்ளை ஏற்றுக் கொண்டார். வையாபுரிப் பிள்ளையின் பார்வையில்
இந்த ஏற்பாடுகள் நடந்தன என்றாலும் அவர் அப்போது (1951-1954)
திருவனந்தபுரம் தமிழ்           ஆராய்ச்சித்துறைத் தலைவராகப்
பணியாற்றியதால் சென்னையில்   இருந்த மு.சண்முகம் பிள்ளையே
பதிப்பு விஷயங்களை முழுதும் கவனிக்க வேண்டியதாயிற்று. 1954ல்
ஐந்தாம் பதிப்பாக மலரும் மாலையும்  வெளிவந்த பிறகு அது எந்த
மாற்றமும் இன்றியே தொடர்ந்து  வெளிவந்தது. இது போலவே பிற
தொகுதிகளும் மாற்றமின்றியே வந்தன. 1953 ஜூலையில் தே.வி.யின்
கீர்த்தனங்கள் முதன்முதலாக   வெளிவந்த போது கவிமணி அதில்
கவனம் செலுத்தியிருக்கிறார்.