10

மகிழ்ந்தவர் கவிமணி. பாரதியைப் பாராட்டிப்   பாடிய அவருடைய
பாடலைப் பாடாதார் யார்?
பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா - அவன்
     பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினான் அடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே அடா! - அந்தக்
     கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா

என்ற பாடலை இசையோடு பாடும்போது  கவிமணியைப் போலவே
நாமும் கிறுகிறுத்துப் போகிறோம். ஒருகவிஞர் இன்னொரு கவிஞரை
உணர்ந்த விதம் இதுதான். பாரதி     பாட்டில் சொல்லுக்குச் சொல்
அழகும் ஏறும்; கவி, துள்ளு   மறியைப் போலத் துள்ளும், கல்லும்
கனிந்து கனியாகும்;       பசுங்கன்றும் பால் உண்டிடாது கேட்கும்;
குயிலும் கிளியும் பாட்டில் கூவும்;      வெயிலும் மழையும் அதில்
தோன்றும்; அதில் மலர் விரிந்து  மணம் வீசும் என்று இயற்கையும்
தன்னை இழந்து நின்ற நிலையைக் கவிமணி எத்துணை  அழகாகப்
புலப்படுத்தி விடுகின்றார். நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து
பாடும் உள்ள நெகிழ்ச்சியைக் கவிமணியின் பாடல் காட்டிவிடுகிறது
அல்லவா! கவிமணியின் கவிதைகளிலும் நம் இவ்வியல்பைக் கண்டு
மகிழலாம்.

கவிமணி கனிந்த வயதிலும்     குழந்தை உள்ளம் வாய்த்த
இளைஞராகவே       திகழ்ந்தார். குழந்தைகளின் உளவியலறிந்து
அவர்களுடைய இளம் உள்ளத்தில்   பதியும் வண்ணம் பாடுவதில்
கவிமணி பெரும் வெற்றி     பெற்றவர். கவிமணியின்  குழந்தைப்
பாடல்களைப் பாடாத தமிழ்க்குழந்தைகள் இல்லை என்றே கூறலாம்
பச்கைக் கிளியே வா வா
     பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
     கொஞ்சி விளையாட வா,,,
கண்ணே மணியே முத்தந் தா
     கட்டிக் கரும்பே முத்தம் தா
வண்ணக் கிளியே முத்தம் தா
     வாசக் கொழுந்தே முத்தம் தா’’
.

என்னும் பாடல்களை              இப்பொழுது நாம் பாடினாலும்
குழந்தைகளாகவே மாறிவிடுகின்றோம்.

குழந்தைகட்குத் தாலாட்டுப் பாடல்   பாடும்போதும் கவிமணி பால்
நினைந்தூட்டும் தாயாகி நின்று      தமிழ்ப்பாலைக் குழந்தைகட்கு
ஊட்டுகின்றார்.