‘பாலமுதம் உண்டு தமிழப் பாமாலை பாடி இந்தத்
தாலம் புகழவரும் சம்பந்தன் நீதானோ?’
|
என்று குழந்தையைச் சம்பந்தப் பெருமானாக்கி மகிழ்வார். ‘கொன்றை
அணிந்து அம்பலத்தில் கூத்தாடும் ஐயனுக்கு வன்றொண்டனாக
வளர்ந்தவனும் நீதானோ?’ என்று
சுந்தரரைப் போற்றுவார். கல்லைப்
பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்த மணிவாசகரை நினைத்து உருகுவார்.
பூவில் அயனும் இந்தப்
பூமீது வள்ளுவர் தம்
பாவின் நயம் உணரப்
பாலகனாய் வந்தானோ
|
என்று வள்ளுவரின் பெருமையைக் கடவுளோடு இணைத்துக்காட்டி
மகிழ்வார். கவிமணி தாலாட்டுப்பாடல் மூலம் தமிழ் வளர்த்த
அருளாளர்களையும், புலவர்களையும்
ஒருங்கிணைத்துக் கூறும்போது
அவருக்கிருந்த தமிழ்ப் பற்றையும் தமிழ்ப் பண்பாட்டுணர்வையும்
நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது. ‘பெண்கள் சிறுவீட்டைப்
பேணாதழித்து, அவர்தம் கண்கள் சிவக்கவைக்கும் கண்ணபிரான்
நீதானோ?’ என்று பொதுமை நெறிநின்று இறைவனையும்
போற்றுவதைக் காணலாம்.
‘பச்சைக்கிளியைப் பார்த்துப் பவழவாய் திறந்துபாடு’ என்பார்.
‘வட்டமாய் உன் கழுத்தில் - ஒரு நாளும் வாடாத ஆரமதை இட்டவர் ஆரடியோ?’ என்று கற்பனை நயத்தோடு கிளியைக் கேட்பார்.
கண்ணுக்கு மைகொண்டு வரச்சொல்லி காக்காயை வேண்டுவார்.
‘காலை கூவி எங்களைக் கட்டில் விட்டெழுப்புவாய்’ என்று கோழிக்கு
நன்றி பாராட்டுவார். நாய்க்கு ‘ஆட்டுக்கிடைப் பாண்டியன்’
‘அன்புமிக்க தோழன்’ என்று அடைமொழி தந்து மகிழ்வார்.
‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு -அங்கேதுள்ளிக் குதிக்குது
கன்றுக்குட்டி’ என்று இயற்கைச் சூழலை எழிலுறக் காட்டுவார்.
‘எலிக்கும் எலிக்கும் திருமணம்’ நடத்தி வாழ்க மணமக்கள் என
வாழ்த்தி மகிழ்வார். ‘பந்தம் எரியுதோடி - கண்களைப் பார்க்க
நடுங்குதடி’ என்று புலியின் கண்ணைப் பார்த்து அச்சமுறுவார். அவர்
பாடலுக்குப்பின் ‘பாட்டிவீட்டுப் பழம்பானை’யும் பெரும்புகழ் பெற்றது.
இப்பாடலைப்படித்து மகிழாதவர் யார்? கவிமணியின் கவிநெஞ்சத்தில்
சிறு பொருள்களும்கூடப் பேருருக் கொண்டு அவர்தம் கவித்திறத்தால்
பெரும் பெருமை பெற்றன.
மீராபாயின் பாடல்களை ‘அன்பின் வெற்றி’ எனும் தலைப்பில்
பாடிய கவிமணியின் பாடல்கள் குறிப்பிடத் தகுந்தன. கண்ணன்மீது
கொண்ட
|