13

கவிமணியின் மதுவிலக்குப் பாடல்கள், சுகாதாரக் கும்மி, யுத்தக்
கொடுமைகள், உலகசமாதானம், சர்வாதிகாரி   முதலாயின அவருடைய
காலத்தில் நிகழ்ந்த சமூகக்             கொடுமைகளின் பதிவுகளாக
விளங்குகின்றன. ‘பெண்களின்    உரிமைகள் குறித்தும்’ கவிமணி பல
ஆண்டுகட்கு முன்னமேயே சிந்தனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘மங்கையராகப் பிறப்பதற்கே      நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்’
என்று பெண்ணின் பெருமை             பேசுவார். அவர்கள் படும்
துன்பங்களையும் விவரித்துள்ளார்.     கதர் விற்பனை, வட்ட மேசை
மாநாடு, வீரத்தாய்,        தேசக்கொடியின் சிறப்பு. சுதந்திரம், தேசத்
தலைவர்கள் பற்றிய பாடல்கள்      முதலாயின கவிமணியின் நாட்டு
உணர்வைக் காட்டும்.

கவிமணி தம்        காலத்து வாழ்ந்த அரசர்கள், அறிஞர்கள்,
அரசியல் தலைவர்கள்,       தமிழ்ச் சான்றோர்கள் ஆகியோரையும்
வாழ்த்திப் பல பாடல்கள்   பாடியுள்ளார். அவர் காலத்தின் பல்வேறு
சூழல்களையும் புரிந்து கொள்ள இவை பெரிதும் பயன்படும்.

கவிமணியின் ‘ஆசியஜோதி’     எட்வின் ஆர்னால்டு எழுதிய
Light of Asia என்பதன் தழுவலாகும்.  புத்தர்பிரான் சிந்தனைகளில் பெரிதும்
 ஈடுபாடு கொண்ட      கவிமணி அவர்களின் ஆசியஜோதி
அவர்தம் படைப்புகளுள் சிறப்பான ஒன்றாகும். ரசிகமணியின் இதயம்
கவர்ந்த நூல் ஆசிய ஜோதி.   நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப்
பற்றியும் பௌத்த             சமயத்தைப் பற்றியும் பல குறிப்புகள்
காணப்படுகின்றன.       எனினும் அவற்றைக் கொண்டு நாம் புத்தர்
பெருமானுடைய சரிதத்தை        முற்றும் அறிந்துகொள்ள இயலாது.
இக்குறையைக்     கவிமணியவர்களின் ‘ஆசிய ஜோதி’ இப்பொழுது
போக்கிவிட்டது என்பார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.

தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
     தினமும் கேட்பது என் செவிப் பெருமை
ஆசிய ஜோதியெனும் புத்தர் போதம்
     அழகு தமிழில் சொன்னான் அது போதும

என்று பாடி மகிழ்ந்தார் நாமக்கல் கவிஞர்.

கவிமணி தமிழிசையிலும்       ஈடுபாடு கொண்டவர். தமிழிசையின்
பெருமையைத் தம்  கீர்த்தனைப்பாடல்களிலும் தெளிவுறுத்தியுள்ளார்.