17

வில்லை. நன்றாக          நடக்கவில்லையா? கடல் ஏறவில்லை;
பூமிதாழவில்லை” என்று   அவர் சொல்லிச் சென்றிருப்பது. குமரி
மாவட்டப் பகுதி       தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும்
என்பதில்        அவர் கொண்டிருந்த சத்திய வேட்கை, அவரது
அக்கால வயதையும், இயல்பான அமைதிப் போக்கையும் எண்ணும்
போது, வியப்புத் தருகிற ஒன்று. இணைப்பியக்கத்தில் அவர் காட்டி
வந்த ஈடுபாட்டை       எதிரிட்ட அரசு, அவரைக் கைது செய்து
கொண்டு போகத் திட்டமிட்டிருந்ததாகக் கவிமணியின்மிகநெருங்கிய
சீடர்களில் ஒருவராகிய           பேராசிரியர் வீரபத்திரன் தமது
கட்டுரையொன்றில்       எழுதியிருக்கிறார். பொதுவாகக் கவிமணி
“குழந்தைக்காகப்”           பாடினார்; “குழந்தையாகிப்பாடினார்”
என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால், அவர் “குழந்தைமைக்காகப்”
பாடினார் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும்.

அவர், தமக்குத்தாமே           சூட்டிக்  கொண்ட அந்தப்
புனைபெயர்களில் ஒன்று ‘யதார்த்தவாதி’;   மற்றொன்று ‘ஆண்டான
கவிராயன்’ என்பதும் இங்கு      நினைவு கூர்தற்குரியது. அக்கால
சமுதாய அநீதிகளைச் சபித்துப் பாடியவன் ‘ஆண்டான் கவிராயன்’,‘
மெய்கண்டான்’,        ‘ஐயம்பிள்ளை’ என்ற பெயர்கள் ஐயங்களை
எழுப்பித் தெளிவு தேடும்  “குழந்தைமையைச்” சுட்டிக்காட்டுகின்றன.
‘நாஞ்சிநாடன்’       என்ற புனைப் பெயர். நாட்டார் சமூகங்களிடம்
வழக்கமாகக் காணப்பெறுகிற பிறப்பிடப் பற்றைக் குறிப்பிடுகிறதெனில்,
‘கணபதி’ என்ற பெயரோ அவரது   ‘இல்லத்துப்’ பெயராகும். தேசிய
விநாயகர் என்று   பெயரிடப்பெற்ற அவரது சிற்றப்பா பிள்ளைகளும்
‘கணபதி’ என்ற      ‘இல்லத்துப்’ பெயரால்தான் அழைக்கப் பெற்று
வந்தனர்.

இந்தப் பதிப்பின்      அமைப்பு கவிமணியை ‘முழுமை’யாகக்
‘கண்டு பிடிக்க’      நமக்கு உதவுவதாயுள்ளது. கவிமணி நூல்களில்
இதுவரை தொகுக்கப்பெற்றிராத     119 பாடல்கள் இங்குச் சேர்க்கப்
பெற்றுள்ளன. பாடல்களின் அடிக்குறிப்புக்கள்மேலும் தெளிவுபடுத்தப்
பெற்றுள்ளன. குறிப்பிட்ட பாடல்களின் பின்புலமாகப் பத்திரிகைகளில்
வரையப் பெற்றிருந்த படங்கள் பற்றிய தகவல்கூட, ஓவியர்பெயருடன்,
தரப்பெற்றுள்ளன. அனைத்தினும் மேலாகப் பாடல்கள்காலவரிசைப்படி
முறைப்படுத்தப்பட்டுள்ளன,

‘உலகெலாம்’ எனத்     தொடங்கி, ‘உலகெலாம்’ என முற்றுப்
பெறுவதைப்         பெரியபுராணத்தின் ஒரு பெருஞ்சிறப்பு என்று
கூறுவதுண்டு. இந்தக் கவிமணியின் கவிதைகள்தொகுப்பும் ‘சீருதவும்’
என்று தொடங்கி ‘வாழ்கவே’ என்று முற்றுப் பெறுகிறது.தொடக்கமும்
முடிவும் அருமையான