மங்கலச் சொற்களாகவே உள்ளன. தொகுப்பு தெய்வம் பராவலில்
ஆரம்பித்து, தேசியக்கொடி வணக்கத்தில் சென்று முடிவது,
கவிமணியின் பல்துறை ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவதாயுள்ளது.
தொகுப்பிலுள்ள முதற்பாடல் ஒரு கழிநெடிலடி ஆசிரியம்;
கடைசிப்பாடலோ, சிற்றடிகளைக் கொண்ட ஒரு கீர்த்தனம்;
கவிமணி
பாடல்களின் பன்முக யாப்பமைதியை இது சுட்டிக்காட்டும்.
இந்த நூல் ஆய்வு மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
வள்ளுவரைப் படித்தறிய எவ்வாறு பரிமேலழகர்
இன்றியமையாதவரோ, அதுபோலக் கவிமணியை இனங்காண,
வையாபுரிப்பிள்ளையின் முன்னுரைகள் இன்றியமையாது வேண்டும்.
அந்த முன்னுரைகள், இங்குப் பின்னுரைகளாக இணைக்கப்
பெற்றுள்ளன என்பது மட்டுமல்ல, பிற்கால ‘ஆசியஜோதி’
பதிப்புகளில் சேர்க்கப் பெற்றிராத அந்தமுன்னுரையுங்கூட இந்தத்
தொகுப்பில் காணக்கிடைக்கிறது. மேலும், இந்நாள் வரை கவிமணி
தொடர்பாக எழுதப்பெற்றுள்ள நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்
பட்டியலொன்றும் தரப்பட்டுள்ளது. பட்டியலைப் பார்க்கும்போது, கவிமணியை ஒரு தமிழ்மணியாக,
குழந்தைப்பாடலாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, ஆய்வாளராகச் சிலர் அணுகியுள்ளனர்.
அவருடைய சமுதாயச் சிந்தனைகள், மெய்யுணர்வு, மற்றும்
இலக்கியக்
கொள்கைகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்
பெற்றுள்ளது. இருந்தாலும், அழகம்மை ஆசிரிய விருத்தத்திலிருந்து,
தனிப்பாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள்,
மான்மியம், ஆசியஜோதி,
உமர்கய்யாம், கீர்த்தனைகள், சாற்றுக்கவிகள் என அவரது
பரிணாமத்தைப் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு இதுவரை
மேற்கொள்ளப்படவில்லை. கவிமணியின் அனைத்துப்
படைப்புகளும் ஒரு சேரத் தொகுத்துத் தரப் பெறாதிருந்ததே
இதற்குக் காரணம். இப்போது நமக்குக் கிடைத்துள்ள
இந்த
அகலமான, காலவரிசை முறைப்படியிலான, தொகுப்பு அத்தகைய
ஓர் ஆழமான ஆய்வுக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது.
ஆசிரியர்களின் நெடுங்கால, இடைவிடாத, ஈடுபாட்டுடன்
கூடிய முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த வெளியீடு. கவிமணியின்
‘பாஸ்வெல்’ ஆகிய சதாசிவம்
பிள்ளையவர்களிடமிருந்து
செதிலுண்ணும் நிலையிலிருந்த, கவிமணியின் கையெழுத்துப்
பிரதிகளையெல்லாம் சேகரித்திருக்கிறார்கள். பத்துப் பதினைந்து
ஆண்டுகளுக்கு முன்னரே சகோதரர் அ.கா.பெருமாள், கவிமணியின்
ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் தமிழ்ப்படுத்தி, அச்சேற்றச்
சித்தமாக்கி் கொண்டிருந்ததை
நானறிவேன். தமது பல்வேறு
ஆய்வுகள் தொடர்பாகப் பல்வேறு நூலகங்களுக்குச் செல்லும்
போதெல்லாம், கவிமணியின் படைப்புகளைத் தேடிக்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.;
|