உள்ள நூலகங்களிலும், மறைமலையடிகள் நூல் நிலையம்,
நாகர்கோவில் கவிமணி நினைவு நூலகம் ஆகியவற்றிலும் நாங்கள்
செய்திகளைச் சேகரித்தோம்.அந்தக் காலங்களில் இந்நூலகங்களைச்
சார்ந்தவர்கள் மிகப்பெரிதும் உதவினர்.
நாகர்கோவில் இந்துக்கல்லூரிப் பேராசிரியர்கள் எம்.சுப்பிரமணியமும் டாக்டர் தெ.வே. ஜகதீசனும் சில அரிய
நூற்களைப் பெற உதவினர்.
இந்நூலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள கவிமணி
தொடர்பான படங்களில் ஒரு படம் தவிர்த்துப் பிற எல்லாவற்றையும்
எங்களுக்குத் தந்து உதவியவர் நாகர்கோவில் நாதன்ஸ்டுடியோஆதி.
நாகநாதன் அவர்கள், இவர்கவிமணியிடம் நெருங்கிப் பழகிய
கவிமணிதாசன் என்னும் கவிஞர் ஆதிமூலப் பெருமாளின்மகனாவார்.
புகைப்படக் கலைஞரும், ஓவியருமான கவிமணிதாசன் அரிதில்
முயன்று எடுத்த படங்களை ஆதி.நாகநாதன் பாதுகாத்து வருகிறார்.
கவிமணியின் ஒரு படத்தைத்
தந்தவர் பேரா.என்.தாணுகிருஷ்ணன்
அவர்கள்.
எங்கள் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும்
ஸ்ரீ செண்பகா பதிப்பத்தாரே இந்தநூலை வெளியிட முன் வந்தனர்.
இப்பதிப்பக உரிமையாளர். ஆர்.எஸ்.சண்முகம் அவர்கள் இந்நூலை
வெளியிடப் பெரிதும் ஆர்வம் காட்டினார்.இவர்கள் அனைவருக்கும்
எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
அ.கா.பெருமாள்
எஸ்.ஸ்ரீகுமார்
|
நாகர்கோவில்
|