முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 1 |
Untitled Document மலரும் மாலையும் | | தெய்வப் பாடல்கள் (1) | | 1. அழகம்மை ஆசிரிய விருத்தம் | | உதயமார்த்தாண்ட விநாயகர் காப்பு |
1. | | சீருதவும் நல்லூராந் தேரூர் அழகிதிருப் பேருதவும் பாவினையான் பேசவே - ஓருதய மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல் காத்தாண்டு கொள்ளக் கடன். |
வேறு | 2. | | பூவாகி அப்பூப் பொருந்துவண மாகிஅப் பூவினுறு மணமு மாகிப் பூதமாய்ப் புலனாய்ப் புறப்பாழு மாய்அப் புணர்ப்பைஅறி விக்கும் அறிவாய் ஓவாத அறிவினுக் குறுமிலக் காகிநின்று உண்மையை உணர்த்து கின்ற ஒண்சுடர்க் கற்பூர தீபமாய் வல்லிருள் ஒழித்திலகு நெறிவிளக்கும் மாவேத மாய்ஆக மப்பொருளு மாகியே மலியும்உன் உருளை யென்றும் வாயார வாழ்த்தித் துதிப்பதினும், மேலான வாழ்வேதும் எங்கு முண்டோ? தேவாதி தேவர்தொழு மூவா மருந்தே! சிவானந்த போக விளைவே! தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே! தேவியழ கம்மை உமையே! |
3. | | பத்திக்கும் என்மடப் புத்திக்கும் ஓயாத பகையலால் பட்ச மில்லை; பஞ்சமா பாதகமும் எஞ்சா தெனக்குற்ற பள்ளியிற் பாடம்; அம்மா! | |
|
|