பக்கம் எண் :

2கவிமணியின் கவிதைகள்

Untitled Document
துத்திக்கும் உன்பதம் சுற்றி பணிந்துசிறு
     தொண்டுகள் செய்தும் அறியேன்;
தோத்திரப் பாமாலை சாத்தியறி யேன்; இவை
     சொல்லுதற் கொன்றி ரண்டோ?
மத்திக்கும் வெண்தயிரை யொத்துக் கலங்குமென்
     மறுக்கம்நீ காண விலையோ?
மைந்தனேன் செய்கின்ற குற்றங்கள் ஏதுமொரு
     வகையா யெடுக்க லாமோ?
தித்திக்கும் முக்கனிகள் எத்திக்கும் உதிர்கின்ற
     செறிமரச் சோலை சூழும்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!

4.   ஆற்றுப் பெருக்கையொத் தழிகின்ற செல்வத்தை
     அடைவதில் விருப்பு மில்லேன்;
ஆண்டியாய் வேண்டிப் புசித்துண்டு நாடோறும்
     அலைவதில் வெறுப்பு மில்லேன்;
காற்றுப் பெயர்ந்திடிற் காயமோ சூத்திரக்
     கயிறற்ற பாவை, அதனால்
காரியம் சிறிதேனு முளதோ? உன் இருபதக்
     கஞ்சமே தஞ்ச மென்று
போற்றிப் பெரும்பேறு பெறுதற்கென் உள்ளம்எப்
     போதுந் தவிக்குது அம்மா!
பொங்கிடுங் குரவையிட் டெங்கமோ ரொலி செய்து
     பொலிவாக மள்ள ரெல்லாம்
சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற
     செய்யகஞ் சூழும் ஊராம்
தென்னரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!

5.   பொன்னையே பெண்ணையே மண்ணையே எண்ணி என்
     பொழுதெலாம் போக்கி விட்டேன்.
புண்ணியச் செயலெதும் பண்ணியான் அறிகி லேன்
     பொல்லாங்கு புரியும் நெறியேன்.