பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு3

Untitled Document
    முன்னையோர் சொன்னமொழி உன்னாத முழு மூடன்
     மூர்க்கரோ டுறவு கொண்டேன்,
மூவிலகும் என்னையொப் பாரில்லை, இல்லை இது
     முக்காலும் உண்மை, உண்மை;
அன்னையே நின்னையே அல்லாது பின்னையோர்
     ஆதாரம் வேறும் உண்டோ?
அறிவற்ற சிறியேனை, அன்பற்ற கொடியேனை,
     அடிமையாய் ஆண்டு கொள்வாய்;
தென்னையே புன்னையே மன்னிவளர் சோலைஎத்
     திக்கினுஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!

6.   தையலார் மீதிலே மையலாய் ஓயாது
     சண்டாள நெறியி லெல்லாம்
சாடிக் குதித்தோடி அலைகின்ற மனதையான்
     சற்றேனும் உன்னை நோக்கிப்
பொய்யிலா மெய்யன்பு பூண்டே துதித்திடப்
     போதனைகள் செய்வதெல்லாம்
பொறியெழும் பாலைவிழு துளியாவ தன்றிஒரு
     புண்ணியம் பெறுதல் காணேன்;
மையிலா நெறிகாட்டி, அடியரிற் கூட்டி, உன்
     மலர்ப்பதஞ் சென்னிசூட்டி,
வற்றாத கருணையாந் தெள்ளமுதம் ஊட்டி, எனை
     வாழ்விப்ப தெந்த நாளே?
செய்யெலாந் துய்யவெண் சங்கினம் இராப் பொழுது
     திங்களின் ஒளியை வீசும்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!

7.   முக்கோணம் முதலான கோணங்க ளிட்டுனது
     மூலாட் சரத்தை யிட்டு
மும்மலம் அறுக்கும்உன் செம்மலர் தாளையே
     முறையுடன் பூசை புரிவோர்,