|
போவதில்லை
!
காதலர் உறவுவெளிப்பட்டது. அவளை வீட்டில் அடைத்துப் போட்டனர்.
சுடுசோல் பொழிந்தனர். உறவினர் எல்லோரும் கடுகடுத்தனர். சில நாட்களுக்குப் பின்னர்
அவள் வயலுக்குச் செல்லுகிறாள். அவன் அவளைப் பின் தொடருகிறான். அவள் பேசாமலேயே முன்
செல்லுகிறாள். அவன் பேச்சுக் கொடுக்கிறான்; அவள் கடுகடுப்பாக 'என் முகத்தைப் பாராதே'
என்று கூறுகிறாள். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் வேலை செய்யும் நேரமெல்லாம் வரப்பிலுள்ள
கல்லின் மேல் உட்கார்ந்திருக்கிறான். கடைசியில் அவள் நிமிர்ந்து
“
உன்னால்
பகை உண்டாகிறது போய் விடு
”
என்று சொல்லுகிறாள். அவனோ
“என்ன
பகையாகி விட்டாலும், உன்னை மணம் செய்து கொண்டுதான் ஊரைவிட்டுப் போவேன்
”
என்று சத்தியாக்கிரகம் செய்கிறான்.
| ஆண்: |
ஒத்தடிப்
பாதையிலே
உன்னதமாப் போற புள்ளே
ஒன்பது
வகைப் பூத்தாரேன்
என் முகத்தைப்
பாரேண்டி
|
|
பெண்:
|
பார்த்தனடா உன் முகத்தை
பகைச்சனடா
என் ஜனத்தை
கேட்டனடா
உன்னாலே
கேளாத
கேள்வியெல்லாம்
கல்லோரம்
காத்திருக்கும்
கருத்தக்
கொண்டை சிவத்தச்சாமி
ஏனையா
காத்திருக்கே?
ஏகப்பகை
ஆகுதையா
!
|
| ஆண்
:
|
ஏகப்பகை ஆனாலென்ன?
எதிராளி வந்தாலென்ன?
உன்னை மணம் செய்யாமல்
ஊரை விட்டுப் போவதில்லை |
|
சேகரித்தவர்:
S.S.
போத்தையா |
இடம்:
தங்கம்மாள்புரம்.
|
|