|
சேலையில் குறைவு
கணவன்
எத்தகைய சேலை எடுத்தாலும் மூக்கால் அழும் மனைவி இவள். கருப்புச் சேலை எடுத்துக் கொடுத்தான்-குறை
சொன்னாள். பச்சைச் சேலை எடுத்தான்-குறை சொன்னாள். 18 முழம் சேலை எடுத்தான்.
சுற்றுக்குப் பற்றாது என்றாள். 22 முழம் எடுத்தான். அப்பொழுதும் ஏதோ குறை
சொன்னாள். கணவன் பொறுமைசாலிதான். அவளைத் தேற்றி திருவிழாப் பார்க்க அழைக்கிறான்.
| கணவன்:
|
எள்ளுக் கருப்புச்
சீலை
எடுத்துடுத்தும்
சாயச்சீலை
சுத்துக்கு
எட்டலணு
சுண்டுதாளே
கண்ணீரை
எள்ளுக் கருப்புச் சீலை
இருபத்திரண்டு
முழம்
உடுத்திப்
புறப்படடி
உள்ளூருச் சாமி பார்க்க
பாசிப்
பயத்தஞ் சேலை
பத்துலட்சம்
பெத்த சேலை
சுத்துக்கு
எட்டலண்ணு
சுண்டுதாளே
மேமுழிய
முந்திப்பச்சையடி
முழுநிறம்
நீலமடி
ஊதாக் கருப்புச் சீலை
உட்காரடி பக்கத்தில்
|
வட்டார வழக்கு:
எட்டலணு-எட்டவில்லை
என்று; மேமுழிய-மேல் விழியை.
|
சேகரித்தவர்:
S.M. கார்க்கி |
இடம்:
சிவகிரி.
நெல்லை மாவட்டம் |
|