|
சின்ன மாமா
செலவில்லாமல், காதலியை அழைத்துக் கொண்டு போய் மணம் செய்து
கொள்ள விரும்புகிறான், மாமன் முறையுடைய உறவினன். அவள் பலரறிய மணம் செய்து கொள்ள வேண்டுகிறாள்.
அவனோ கரு
மி;
அதற்கு மனம் வரவில்லை. அவனிடம் அவள் கண்டிப்பாகப் பேசுகிறாள்.
“மாட்டைக் கொண்டு போவதானாலும் தலைக்கயிறு வாங்க கால் பணம் செலவு செய்ய வேண்டும். பெண்ணை
அழைத்துப் போக அதுகூட செலவு செய்ய மாட்டாயா,”
என்று அவள் கேட்கிறாள்.
கட்டுக் கவுறு காப்பணமா
டே-சின்ன மாமா
கட்டிப் போடப் பாக்கிறயா
டே-சின்ன
மாமா
ஓட்டாங்கச்சியா ஒரு பணமா
டே-சின்ன மாமா!
என்னை
ஓட்டிப் போய்ட பாக்கறியா
டே-சின்ன மாமா
வட்டார வழக்கு:
கவுறு-கயிறு; ஓட்டாங்கச்சி-ஓட்டுத்துண்டு;
போய்ட-போய் விட.
|
சேகரித்தவர்
:
சடையப்பன் |
இடம்:
சேலம் மாவட்டம். |
|