|
எம் புருஷன்
மணமானவுடன் கணவன் அயலூர் சென்று விட்டான். மனைவியின் தோழிமார்
அவளுடைய புருஷன் உருவத்தைப் பற்றிக் கேலிப் பேச்சுப் பேசுகிறார்கள். அனேகமாக இவ்விதப்
பேச்சுகளுக்கு புதுமணப் பெண், நாணத்தால் பதில் கூறாமல் இருந்து விடுவாள். ஆனால் தைரியமிக்க
இப்பெண் தன் புருஷனின் பெருமையை தோழியரிடம் விளக்கிக் கூறுகிறாள்.
ஆளுலேயும் கட்டயாளு
அழகிலேயும் பூஞ்சிவப்பு
மார்வு அடர்ந்த எம்மச்சான்
மறக்க மனம் கூடுதில்ல
ஈத்தம் குருத்து போல
இடை சிறுத்த எம்மச்சான்
வாழைக்குருத்து போல
வாச்சாரே, எம்புருஷன்
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு |
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம். |
|