|
சிவத்தக்
கிளி
வேலை முடிந்து தனியாகவரும் இளமங்கை ஒரு பாட்டை முணு முணுத்துக் கொண்டு நடக்கிறாள். எதிரே
அவள் காதலன் வருகிறான். அவனைப் பார்த்ததும் அவள் நாணம் கொண்டு பாட்டை நிறுத்திவிட்டு
தலைகவிழ்ந்து நிற்கிறாள். அவன் அவளை நோக்கிப் பாடுகிறான்.
ஆத்துக்குள்ளே ரெண்டரளி
ஆறுமுகம் வச்சரளி
சுத்திவந்து பூவெடுக்கும்
சுத்தமுள்ள பத்தினியே!
வளைவு ரோட்டுப் பக்கத்திலே
வருகுதையா செவத்தக் கிளி
சலசலன்னு வந்த கிளி
தலை கவிழ்ந்த மாயமென்ன?
கட்ட கட்ட உச்சி நேரம்
கடுவா புலி வார நேரம்
ஒருத்தன் கையிப் பத்தினியே
ஒத்தையிலே நிக்குறாளே!
ரோட்டோரம் வீட்டுக் காரி
ரோசாப்புச் சேலைக்காரி
காத்தோரம் கொண்டக்காரி
கண்ணக் கண்ண வெட்டுறாளே!
புள்ளி ரவுக்கைக்காரி
புளியம்பூச் சேலைக்காரி
புள்ளி ரவுக்கை மேலே
புதுமணம் வீசுதடி
நடைபலகை மிதிகிணறு
நாணயமா போறபிள்ளா
பொடி நடையும் புருவக்கட்டும்
போகமனம் கூடுதில்ல
மாங்கா நிறத்துப் பிள்ளா
மாநிறத்துப் பள்ளப் பிள்ளா
தேங்கா நிறத்துப் பிள்ளா
தேடுறனே உம் புருசன்
வட்டார
வழக்கு:
தேடுறனே-தேடுகிறேனே;
ரெண்டரளி-இரண்டரளி;
கவிந்த-கவிழ்ந்த;
காத்தோரம்-காதோரம்;
பிள்ளா-பெண் (நாடார்
சாதி வழக்கு)
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு |
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம். |
|