இது போன்ற வண்டிக்காரன் பாட்டுகள் தூத்துக்குடியருகிலும் பாடப்படுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு:

மூடை பிடிக்கும் வண்டி
முதலூர் போகும் வண்டி
மூடை விலை ஆனவுடன்
மூக்குத்தி பண்ணிப் போடுறேனே
தகரம் பிடிக்கும் வண்டி
சாத்தான்குளம் போகும் வண்டி
தகரம் விலை ஆனவுடன்
தாலி பண்ணி போடுறேனே
வெங்காயம் பிடிக்கும் வண்டி
வெள்ளூர் போகும் வண்டி
வெங்காயம் போனவுடன்
வெள்ளிக் காப்பு போடுறண்டி.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
மீளவிட்டான், தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.