|
ஆண்: |
கரும்பைத் துரும்பாக்கி
கல்தூணை வில்லாக்கி
விரும்பாமப் போற
பொண்ணே
வேலி எட்டிப்
பாக்கலாமோ
உலக்கை போடும்
கைதனிலே
ஓசையிடும்
வளையல் சத்தம்
சண்டாள
வளையல் சத்தம்
சாடை சொல்லிக் கூப்பிடுது
|
| பெண்: |
கொண்டது
குடுமித்தலை
கொஞ்சினது
பம்பைத்தலை
அள்ளி முடியுமுன்னே
ஆளைக்
காண முடியலியே
|
|
ஆண்: |
ஒட்டுச்
சுவருன்னு
ஒரு நாள்
ஒதுங்கப் போயி
கட்டிச்
சதுரமெல்லாம்
கசறாக
உருகுதடி
செம்பாதி
நேரத்திலே
சேர்ந்து
நீ வந்த புள்ள-இப்போ
வம்பான
வார்த்தை பேசி
வார்த்தைக்கிடம்
பண்ணாதே
கண்டு
உறவானோம்
கண்டொரு
நாள் பேசினோம்
இன்னொரு
நாள் பேசுதற்கு
இரங்கலியே
உன் மனசு
|
| பெண்: |
கருப்போ
கருப்பழகு
கந்தசாமி தன்னழகு
அருப்பம் அழகுக்கல்லோ
ஆசை வெச்சேன் உன் பேரில்
|
|
ஆண்: |
கன்னம் புருவத்துக்கும்
கண்ணுருக்கும் தேமலுக்கும்
சின்ன முகத்துக்கும்
சிறியாள் வணக்கினாளாம்
|
| பெண்: |
வயக்காட்டைப்
பாத்து விட்டு
வரப்போரம் வார சாமி
வரப்பு
வழுக்கிச்சின்னு
வகை மோசம் வந்ததையா
|
|
ஆண்: |
எப்படி
வழுக்கினாலும்
என்ன செய்யப்
போகுதடி
உன் மனசு இருக்கும் போது
ஊக்கத்தைக் கை விடாதே
|
| பெண்: |
வேப்பம்பூ
பூக்காதோ
விடிந்தால்
உதிராதோ
நேற்று
வந்த தோழனுக்கு
நேரம் தெரியாதோ |