|
ஆசாரக் கூடம்
நடுத் தெருவில் தண்ணீர்
கேட்கும் காதலனுக்கு காதலி கூறும் விடையை முன்னர் வந்த பாடல்களில் நாம் கண்டிருக்கிறோம்.
இப்பாடலில் அலங்காரம் செய்யப்பட்ட மணமேடைக்கு வந்து தண்ணீர் கேட்கச் சொல்லுகிறாள்
காதலி. பாடல் காதலர்களின் உரையாடல்.
|
காதலன்:
|
நீளக் கயிறு போட்டு
நின்னு
தண்ணி யிறைக்கும்
தாளம்
போட்ட கையாலே
தண்ணி
தந்தால் ஆகாதோ?
|
|
காதலி: |
தண்ணியும்
நான் தருவேன்
தாகமதைத்
தீர்த்திடுவேன்
கூடத்துக்கு
வந்தியானா
குளிர்ந்த
ஜலம் நான் தருவேன்
|
|
காதலன்:
|
கூடமும்
நானறியேன்
குளிர்ந்த சாலை
நானறியேன்
அடையாளம் சொன்னியானால்
அங்கு வந்து
சேர்ந்திடுவேன்
|
|
காதலி:
|
கெண்டை கொண்டு தூண் நிறுத்தி
கெளிறு
கொண்டு வளைபரப்பி
அயிரை
கொண்டு மேஞ்சிருக்கும்
ஆசாரக் கூட மது |
வட்டார வழக்கு:
ஆசாரக் கூடம்-மணமேடை.
குறிப்பு:
கடற்கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருந்து உவமைகள்
எடுத்தாளப்பட்டன. ஆகவே கடற்கரை மக்களின் படைப்பாக இப்பாடல் இருக்கலாம். கெண்டை,
கெளிறு, அயிரை மீன் வகை. மீன் போல் தோரணம் கட்டுவது தமிழ் நாட்டு வழக்கம்.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம். |
|