|
வாசல்படி காக்கிறேன்
!
தனது காதலனைக் கண்டு சீக்கிரம் தன்னை மணம் செய்து கொள்ள ஏற்பாடு
செய்ய வேண்டுமென அவள் சொல்ல விரும்புகிறாள். ஆனால் அவன் தெரு வழியே வரக்காணவில்லை.
ஒரு நாள் அவள் அவனைக் காண்கிறாள். அவன் காதில் எட்டும்படி பாடுகிறாள்.
அஞ்சு பனையோரம்
ஆனைசெடி காட்டோரம்
காட்டு வழி வாரதெப்பம்
கண்டு துயரம் சொல்ல
சந்திர ரதமேறி
சாலிகுளம் வேட்டையாடி
இந்திரரே எங்க சாமி
எந்த வழி வாராரோ?
வருவாரோ இந்த வழி
தருவாரோ வெத்திலையை
தின்னுவேனோ வாய் சிவக்க
தேகமெல்லாம் பூ மணக்க
ஏறினேன் கல் கோட்டை
எடுத்தேன் மணி உருண்டை
வாங்கின மாங்கனியை
வாய் ருசிக்கத் திங்கலியே
பிறக்கின பூப்போல
பொட்டிக்குள்ள நானிருக்கேன்
வாடின பூப்போல
வாசப்படி காக்குறனே
நனையா பச்சரிசி
நார் உரியா வாழைப்பழம்
உடையாத தேங்கா கொண்டு
உறவிருக்க வாரதெப்போ?
வட்டார வழக்கு:
பிறக்கின-பொறுக்கின;
சந்திரரதம்-சூரியனுக்குத்தான் ரதம் உண்டு. சந்திரன் ரதம் இவளது கற்பனை.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டம். |
|