|
காதலி: |
அஞ்சாறு
பேர்களோடு
பஞ்சாயம்
பேசயிலே
மின்னுதையா
உங்க லேஞ்சி
மூணுமைல்
தூரத்துக்கு
|
|
காதலன்: |
வாடின
பூப்போல
வழிகாத்து
நிக்கவேண்டாம்
தேடாதே
எங்கனியே
தினம் வருவேன்
இந்த வழி
|
|
காதலி:
|
போனா
வருவீரோ
பொழுது ஒரு
நாள் தங்குவீரோ
என்னை
மறந்து இன்னு
இருப்பீரோ
இராத்திரிக்கு
|
|
காதலன்
: |
இருப்பிலும்
இருப்பேனோ
இன்னும் கண்டாப் பேசுவனோ
பாதையிலே
கண்டவுடன்
பாவி
மனம் கல்லானேன்
|
|
காதலி : |
மருத
அறிஞ்சவரே
மாமருத
பார்த்தவரே
கொட்டு
எறிஞ்சவரே
கோபமென்ன
என்மேலே
|
|
காதலன்
:
|
புள்ளி
ரவிக்கக்காரி
புளியம் பூச்
சேலைக்காரி
மானு நிறத்துக்காரி
மறப்பது எக்காலம்
மின்னல் வேகத்துக்கும்
மீளவிட்டான் தூரத்துக்கும்
அன்ன நடை அழகுக்கும்
ஆலவட்டம் போடுதடி
|
|
காதலி
: |
இருந்தா குழல் சரியும்
எந்திரிச்சாப்
பூச்சரியும்
நடந்தா
நாடிளகும்
நான் வணங்கும் சாமிமேலே
|
|
காதலன்
: |
கேட்டனடி ஒரு வருஷம்
கெஞ்சினனே
நெஞ்சுருக
மாட்டேன்னு
சொன்னவளை
மலத்தினனே
காட்டுக்குள்ளே
|
|
காதலி
: |
கட்டி அழுத்துதையா
கருவமணி
விம்முதையா
தோகை
அழுத்துதையா
தொரை மகனே கையை விடு. |