(பெண்கள் பாடுவது)
எண்ணைத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கோயில் சிலை யழகா கொல்லுதடா உன்னாசை வாழைப் பழமும் போச்சு வச்சிருந்த வைப்பும் போச்சு தலையைச் சிரைக்கப் போயி தாழம்பூ வாசம் போச்சு காணம் கருங் காணம் கறிக் கேத்த கொத்தமல்லி மானங் கெட்ட அத்தானுக்கு மதுரையில வைப்பாட்டி அஞ்சாறு வீடுகளாம் அதுல ரெண்டு இள வட்டமாம் நாயடிக்க ஏலாட்டியும் நாணயங்க ரொம்ப உண்டாம் இந்த நடை ஏது? இடுப்பிலொரு கையேது? மையேது போட்டேது மதி குலைந்த மன்னவர்க்கு? காத்துட்டுக்கு லேஞ்சி வாங்கி கன்ன மெல்லாம் சுங்கு விட்டு சுங்குக்கு மேலாக சுத்துதடா சீலைப் பேனு மானா மதுரைச் சட்டி வாசலுல போட்ட சட்டி எங்க மச்சான் குடிச்ச சட்டி எடுத்துவுக கொடுத்திருங்க பாதையிலே போற வனே படர்ந்த காவிப் பல்லுக்காரா நீல முழிக்காரிக்கு நீ தாண்டா மாப்பிள்ளை
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
முன்பக்கம்
முகப்பு
அடுத்த பக்கம்