காதோலை
புது மணப் பெண்ணுக்குத் தன் முதல் மாதக் கூலியில் கணவன் காதோலை
வாங்கி வந்தான். அவனுடைய சட்டைப் பைக்குள் காதோலை கிடந்ததைக் கண்டெடுத்த மனைவி,
இது எப்படி அங்கு வந்ததென்று பொய்க் கோபத்தோடு கேட்கிறாள். அவன்
‘பாகற் கொடி பந்தலில் காதோலை காய்ப்பது உனக்குத் தெரியாதா?’
என்று கேட்கிறான்.
பெண்
:
|
சாய
வேட்டிக்காரா-நீ
சாதித் துரை மகனே
வல்லவாட்டு சேப்புக் குள்ள
வந்த தென்ன காதோலை?
|
ஆண்
:
|
தண்ணிக்
குடத்தாலென்
தாக்த்தைத் தீர்த்த தங்கம்
பாவக் கொடி
பந்தலில்
பழுத்ததடி காதோலை. |
வட்டார வழக்கு
:
சேப்பு-சட்டைப்பை
;
பாவக் கொடி-பாகற் கொடி.
சேகரித்தவர்
:
S.S. போத்தையா |
இடம்
:
நெல்லை மாவட்டம். |
|