கணவன் படிக்கும்
சத்தம்
கிராமத்தில் படித்தவர்களே குறைவு. சில வருஷங்களுக்கு முன்னால்
படிக்கத் தெரிந்தவனைப் பற்றி அவனது மனைவிமார்கள் பெருமையாக நினைத்துக்
கொள்வார்கள்.படித்தவனின் மனைவி அவர்
படிக்கும் சத்தத்தைப் புகழ்ந்து தனது தோழியரிடம்
கூறுகிறாள்.
விட்டம் போட்டு வீடெடுத்து
வெளி வாசல் தொட்டில் கட்டி
வெளி வாசல் தொட்டியிலே
வெள்ளிக்கிளி கூவுதுன்னா
வெள்ளிக்கிளி சத்த மில்ல
வீமர் படிக்கும் சத்தம்
சட்டம் போட்டு வீடெடுத்து
தலைவாசல் தொட்டி கட்டி
தலை வாசல் தொட்டியிலே
தங்கக்கிளிகூவுதுன்னா
தங்கக் கிளி சத்தமில்ல
தருமர் படிக்கும் சத்தம்
வட்டார வழக்கு
:
தொட்டி-தொட்டில்
;
வீமர், தருமர்-கணவனைக் குறிக்கும்
;
வெள்ளிக்கிளி கூவுது, தங்கக்கிளி கூவுது-அவன் படிக்கும்
சப்தம்.
உதவியவர்
:
செல்லம்மாள்
சேகரித்தவர்
:கு.
சின்னப்ப பாரதி
|
இடம்
:
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம். |
|