கொழுந்தியாள் குறும்பு
புது மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனுடைய
கொழுந்தியாள் சுட்டிப்பெண். கொழுந்தியாளுக்கு அத்தானைக் கேலி செய்யும் உரிமை உண்டு.
அவன் மேல் சந்தனத்தைக் கொட்டி, இரண்டு குங்குமக் கிண்ணங்களையும் கவிழ்க்கிறாள். அவள்
தோழியரிடம் கூறுகிறாள்.
ஒரு
கிண்ணிச் சந்தனம்
ஒரு கிண்ணிக்
குங்குமம்
அள்ளி அள்ளிப் பூசுங்கோ
அருணப்
பந்தல் ஏறுங்க
ராசாக்
கணக்கிலே
ராசமக்க
தோளிலே
பொறிச்ச பூவும்
பொட்டியிலே
தொடுத்த பூவும்
தோளிலே
ரெண்டு
கிண்ணி சந்தனம்
ரெண்டு
கிண்ணி குங்குமம்
அள்ளி அள்ளிப் பூசுங்க
அருணப்பந்தல்
ஏறுங்க
பொறிச்ச பூவும்
பொட்டியிலே
தொடுத்த மாலை
தோளிலே
சேகரித்தவர்
:
கு.சின்னப்ப பாரதி |
இடம்
:
பரமத்தி,
சேலம் மாவட்டம். |
|