புலி குத்தி வீரன்
சில பெண்கள் பொய்மைப் புலி உருவம் செய்து சோளக் கொல்லையில்
வைத்திருக்கிறார்கள். அப்பெண்கள், அங்கு வரும் ஆண்களிடம் அதைக்காட்டி பயமுறுத்துகிறார்கள்.
தங்களை பயமுறுத்தும் பெண்களின், போக்கில் சந்தேகம் கொண்டு, ஒருவன் போலிப் புலியை
நெருங்குகிறான். உடனே அப்பெண்கள் அவனைக் கேலி செய்து பாடுகிறார்கள்.
காடுசுத்தி வேலியாக்கி
கள்ளரைக்
குத்தி பயங்காட்டி
கோடும் புலி
குத்தி
சோடித்து வருவதைப் பாருங்கடி
பக்கத்து மரத்திலே புலி
கிடக்குது
நித்திரை
போவதைப் பார்த்துச் சுடு
மதுரைக்குப் போற
அண்ணங்களே
என்னென்ன
அடையாளம் கண்டு வந்தே?
கல்லால
மண்டபம் காணிக்கை
சப்பரம் வில்வ
மரந்தாண்டிக் கொண்டாந்தே?
சேகரித்தவர்
:
கு.சின்னப்ப பாரதி |
இடம்
:
பரமத்தி,
சேலம் மாவட்டம். |
|