தவிடு விற்க நேர்ந்ததுவே
ஒரு பெரிய வியாபாரியின் குடும்பத்தில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டாள்.
வெள்ளியும் தங்கமும் வியாபாரம் செய்யும் குடும்பத்தில்தான் அவள் மருமகளானாள்.
ஆனால் வியாபாரம் நொடித்துப் போய்விட்டது.
விறகு விற்றும், தவிடு விற்றும் பிழைக்க நேர்ந்தது.
இந்த மாறுதலை அவள் வருத்தத்தோடு சொல்லிப் பாடுகிறாள்.
வெள்ளி ஒரு நிறதான்
வெங்கலமும் கால்
நிறதான்
நான் புகுந்த காசியிலே
வெள்ளி
வித்த கையாலே
வெறவு விக்க
நேர்ந்ததுவே
தங்கம் ஒரு
நிறதான்
தாமரமும் கால்
நிறதான்
நான் புகுந்த
காசியிலே
தங்கம்
வித்த கையாலே
தவிடு விக்க
நேர்ந்ததுவே
வட்டார
வழக்கு: நிற-நிறை
;
வெறவு-விறகு
:
வித்த-விற்ற
;
விக்க-விற்க.
குறிப்பு
:தனது பொருளாதார நிலைக்குலைவை
“தங்கம்
வித்த கையாலே
தவிடு விற்க
நேர்ந்ததுவே” என்று குறிப்பிடுகிறாள்.
உதவியவர்
:
செல்லம்மாள்
சேகரித்தவர்
:
கு.சின்னப்ப பாரதி |
இடம்
:
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம் |
|